நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ததும் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து பேசிய தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நாற்பத்தி நான்காவது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

CSK
Dhoni CSK

சன்ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் சகா 44 ரன்களும் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் ஆகியோர் 18 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய ரன் குவிப்பை தரவில்லை. பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது. துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்களும் டு பிளிசிஸ் 41 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் மொயின் அலி மற்றும் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழந்தும் வெளியேற இறுதி நேரத்தில் அம்பத்தி ராயுடு மற்றும் தோனி ஆகியோர் அணியை அபாரமாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது இரண்டு பந்துகளை வீணடித்த தோனி பிரம்மாண்டமான சிக்ஸர் ஒன்றிணை விலாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Dhoni
Dhoni CSK

இறுதியில் சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியானது ப்ளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறுகையில், கடந்த ஆண்டு நாங்கள் தொடர்ச்சியான தோல்விகளை பெற்றபோது மீண்டும் பலமாக திரும்பி வருவோம் என்று கூறியிருந்தோம்.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டு சிஎஸ்கே அணி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது இம்முறையும் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தால் எங்களால் காரணத்தை கூட சொல்லியிருக்க முடியாது. ஆனால் இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம்.

இதையும் பாருங்கள்: சி.எஸ்.கே அணிக்காக அசத்தலான சாதனையை இன்று படைத்த தோனி – இப்படியும் ஒரு சாதனையா?

இந்தப் போட்டியில் கூட மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர் இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி என தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement