சி.எஸ்.கே அணிக்காக அசத்தலான சாதனையை இன்று படைத்த தோனி – இப்படியும் ஒரு சாதனையா?

Dhoni
- Advertisement -

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 44-ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மகேந்திரசிங் தோனி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

CSKvsSRH

- Advertisement -

அந்த அணியின் துவக்க வீரரான விருதிமான் சஹா 44 ரன்களையும், அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமாத் ஆகியோர் தலா 18 ரன்களை குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி எப்படியாவது இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ரன்களை குவிக்க வேண்டும் என்று சிறப்பாக விளையாட நினைத்தாலும் மைதானம் ஸ்லோவாக இருந்ததன் காரணமாக அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது இடைவெளியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்ததால் எந்த ஒரு இடத்திலும் ரன் குவிக்க முடியாதபடி அமைந்துவிட்டது.

thakur

அதுமட்டுமன்றி சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்களும் இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணிக்காக ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.

jadeja

அந்த சாதனை யாதெனில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக தோனி மூன்று கேட்ச்களை பிடித்தார். அதில் சன் ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் சஹாவின் கேட்சை பிடித்த தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஒரு கீப்பர் ஒரே அணிக்காக 100 கேட்ச் பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement