8 போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் அணியில் முக்கிய பவுலரை இணைத்த மும்பை இந்தியன்ஸ் – யார் அவர்?

Mills-1
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியானது மிகப்பலம் வாய்ந்த அணியாக இதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் அவர்கள் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அந்த எட்டு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்ததால் தற்போது புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

மும்பை அணியின் இந்த மிகப்பெரிய சரிவுக்கு காரணமாக அந்த அணியின் வீரர்களின் தேர்வு பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே பந்துவீச்சில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன்னர் அந்த அணியில் இருந்த பல முக்கிய வீரர்களை அணியில் இருந்து கழற்றி விட்டு தரமற்ற பந்துவீச்சாளர்களை அணியில் இணைத்ததே மும்பை அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் தற்போது வரை மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வந்த உனட்கட், டேனியல் சாம்ஸ், தைமல் மில்ஸ், பேசில் தம்பி என எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒருபுறம் பும்ரா மட்டும் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அவருக்கு கை கொடுக்கும் அளவிற்கு எந்த பந்து வீச்சாளரும் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சு சார்பாக தமிழக வீரர் முருகன் அஸ்வின் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டாலும் அவரும் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக தற்போது மும்பை அணி பந்து வீச்சில் மிகவும் பலம் இழந்து காணப்படுகிறது.

kulkarni

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்படி மில்ஸ்க்கு பதிலாக 33 வயதாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 86 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

என்னதான் விக்கெட்டுகளை குறைவாக இவர் எடுத்திருந்தாலும் மிகச் சிறந்த பந்துவீச்சாளராகவே இருந்து வருகிறார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் இவர் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி மும்பை அணிக்கு சிறப்பாக இல்லை என்றாலும் இவரின் வருகைக்குப் பிறகு இரண்டாவது பாதியிலாவது மும்பை இந்தியன்ஸ் அணி சில வெற்றிகளை பெருமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 5 விக்கெட் ஹால் எடுத்த டாப் 5 – பவுலர்களின் லிஸ்ட் இதோ

5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது அடுத்த லீக் போட்டியில் பலம் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை அவர்கள் பதிவு செய்வார்களா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

Advertisement