ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 5 விக்கெட் ஹால் எடுத்த டாப் 5 – பவுலர்களின் லிஸ்ட் இதோ

Alzarri Josheph
- Advertisement -

தரமான கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்பளித்து அவர்களின் திறமையை மேலும் பட்டை தீட்டி உலக கிரிக்கெட் அரங்கிற்கு உலகத்தரம் வாய்ந்த வீரராக பரிசளிக்கும் தொடரே ஐபிஎல் ஆகும். கடந்த 2008-இல் சாதாரண தொடராக துவங்கப்பட்ட இந்த தொடர் இன்று பணத்திலும் தரத்திலும் உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உயர்ந்து இந்தியாவிற்கு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் பல தரமான இளம் வீரர்களை அடையாளம் காட்டி வருகிறது. பொதுவாக ஐபிஎல் தொடரில் பவுலர்களை புரட்டி எடுத்து அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசும் பேட்ஸ்மேன்களின் ராஜாங்கம் நடைபெறுவதால் அதில் பவுலர்களின் நிலைமை எப்போதுமே படாத பாடாக உள்ளது.

IPL

- Advertisement -

அந்த சூழ்நிலையில் ஒரு அனுபவம் வாய்ந்த பவுலர் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுப்பதெல்லாம் எப்போதாவது மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடான இத்தொடரில் இளம் பவுலர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுப்பதெல்லாம் உண்மையாகவே மிகவும் கடினமான ஒன்றாகும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் புயலாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 இளம்புயல்களை பற்றி பார்ப்போம்:

5. இஷாந்த் சர்மா: இன்று இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கூட ஒதுக்கப்பட்டுள்ள அனுபவம் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆரம்ப காலகட்டத்தில் அதே நீண்ட முடியுடன் தனது அபார வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடும் பவுலராக இருந்த காரணத்தாலேயே இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி நிறைய சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் கடந்த 2011 ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.

Ishanth

அதில் அப்போதைய கொச்சிக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் 129/7 ரன்கள் எடுக்க அதை துரத்திய கொச்சியை தனது அபார வேகப்பந்து வீச்சால் மடக்கிய இசாந்த் சர்மா வெறும் 3 ஓவரில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்ததால் அந்த அணி வெறும் 74 ரன்களுக்கு சுருண்டு தோற்றுப்போனது. அன்றைய நாளில் 22 வருடம் 237 நாட்கள் மட்டுமே நிறைந்திருந்த அவர் தனது அணிக்கு 55 ரன்கள் வித்தியாச சூப்பரான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்று இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. அர்ஷிதீப் சிங்: பஞ்சாப்பை சேர்ந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் கடந்த சில வருடங்களாகவே அசத்தலாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேர்வுக்குழு கதவை தட்டி வருகிறார்.

arshdeep 1

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 22 வருடம் 232 நாட்கள் மட்டுமே நிரம்பியிருந்த நிலையில் 32 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். அப்போட்டியில் 185 ரன்களை துரத்திய அவரின் பஞ்சாப் 183/4 ரன்களை எடுத்து வெற்றியின் விளிம்பு வரை சென்ற போதிலும் கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எடுக்க முடியாமல் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

3. உம்ரான் மாலிக்: இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி அதற்கு ஈடான விக்கெட்டுகளையும் எடுத்து அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பரபரப்பான போட்டியில் ஹைதராபாத் நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் 69/0 என நல்ல நிலைமையில் இருந்த போது அசுர வேகத்தில் பந்து வீசிய அவர் அடுத்தடுத்த ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை முழுமையாக தனது அணி பக்கம் திருப்பினார்.

Umran Malik 5 Fer

குறிப்பாக வெறும் 22 வருடம் 157 நாட்களில் அவர் எடுத்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்கள் க்ளீன் போல்டாக ஸ்டம்ப்களை தெறிக்க விட்டது. இறுதியில் ராகுல் திவாடியா மற்றும் ரசித் கான் ஆகியோர் இணைந்து அவரின் போராட்டத்தை தவிடு பொடியாக்கினர். இருப்பினும் ஒவ்வொரு போட்டியிலும் மிரட்டலான வேகத்தை வெளிப்படுத்தும் அவர் விரைவில் இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

- Advertisement -

2. அல்சாரி ஜோசப்: 2019 ஐபிஎல் தொடரில் ஹைதெராபாத்க்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 136/7 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த சிறிய இலக்கை துரத்திய ஹைதராபாத்தை அந்தப் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி பந்துவீசிய வெஸ்ட் இண்டீசின் அல்சாரி ஜோசப் தனது மிரட்டலான பந்துவீச்சால் 3.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை எடுத்து வெறும் 96 ரன்களுக்கு சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Alzarri Joseph

அன்றைய நாளில் வெறும் 22 வருடம் 127 நாட்கள் மட்டுமே நிறைந்திருந்த அவர் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற சாதனை உட்பட ஒருசில வரலாற்று சாதனைகளை படைத்து இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. ஜெயதேவ் உனட்கட்: ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான இந்திய பவுலர் ஜெயதேவ் உனட்கட் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய நிலையில் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 183/4 ரன்கள் குவித்தது.

unadkat 2

அதை துரத்திய டெல்லிக்கு சேவாக், ஜெயவர்த்தனே போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை எடுத்த ஜெயதேவ் உனட்கட் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டதால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. அன்றைய நாளில் வெறும் 21 வருடம் 204 நாட்கள் மட்டுமே நிரம்பியிருந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Advertisement