தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 14ஆம் தேதி சேலத்தில் இருக்கும் எஸ்இஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 11வது போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை 20 ஓவரில் போராடி 150/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிக் உர் ரகுமான் 50, பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்கள். திண்டுக்கல் அணிக்கு பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்து அசத்தினர்.
ரன் அவுட் காமெடி:
அந்த இன்னிங்ஸில் பெரியசாமி வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தை குர்ஜப்நீத் சிங் அதிரடியான பவுண்டரியாக பறக்க விட்டார். அதை ஸ்லிப் பகுதியில் நின்ற திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் அபாரமாக தடுத்து ஸ்டம்ப் நோக்கி எறிந்தார். ஆனால் அதை பெரியசாமி பிடித்து அடிக்கத் தவறினார். அந்தப் பந்தை எடுத்த திண்டுக்கல் அணியின் பேக்-அப் ஃபீல்டர் விக்கெட் கீப்பர் திசையில் இருக்கும் ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார்.
இருப்பினும் அதை விக்கெட் கீப்பர் பிடித்து அடிக்கத் தவறியதால் பந்து பின்னோக்கி சென்றது. அதை எடுத்த மற்றொரு பேக்-அப் ஃபீல்டர் பெரியசாமி இருக்கும் திசையில் உள்ள ஸ்டம்ப் மேலே எரிந்தார். ஆனால் அந்தக் குறியும் தவறியது மட்டுமின்றி பெரியசாமி பந்தை பிடித்து அடிக்கத் தவறினார். இறுதியில் பின்புறத்தில் இருந்த பேக்-அப் ஃபீல்டர் பந்தை கையிலெடுத்து “அடித்தது போதும் நிறுத்துங்கள்” என்ற வகையில் தூக்கிப் போடாமல் தம்முடைய கையிலேயே வைத்துக் கொண்டார்.
கடுப்பான அஸ்வின்:
மறுபுறம் தாம் கொடுத்த பந்தை ரன் அவுட் செய்யாமல் 3 முறை தவற விட்ட தங்களுடைய வீரர்களை பார்த்து திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் கடுப்பான ரியாக்சனை கொடுத்தார். அந்த காமெடியை பார்த்து வர்ணனையாளர்கள் நேரலையில் சிரித்தனர். அடுத்ததாக விளையாடிய திண்டுக்கல் அணிக்கு 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் அதிரடியாக 49 (29) ரன்கள் குவித்து விக்னேஷ் வேகத்தில் அவுட்டானார்.
இதையும் படிங்க: நாங்கள் இந்தியா இல்ல.. பட் கமின்ஸை சேர்த்து ஆஸிக்கு 29 வருட சாதனை தோல்வியை பரிசளித்த தெ.ஆ
அவருடன் சேர்ந்து விளையாடிய சிவம் சிங் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86* (41) ரன்கள் குவித்தார். இறுதியில் ஹன்னி சைனி 14* (7) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்ததால்12.3 ஓவரிலேயே 151/1 ரன்களை எடுத்த திண்டுக்கல் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 2வது வெற்றியைப் பெற்று அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.