நாங்கள் இந்தியா இல்ல.. பட் கமின்ஸை சேர்த்து ஆஸிக்கு 29 வருட சாதனை தோல்வியை பரிசளித்த தெ.ஆ

Wtc final ind
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்ததாக 74 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு சுருட்டியது. இறுதியில் 282 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கைத் தொட்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் சதத்தை அடித்து 136, கேப்டன் பவுமா 66 ரன்களை அடித்து வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

29 வருடம் கழித்து:

இதன் வாயிலாக 1998க்குப்பின் 27 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் 29 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

5 உலகக் கோப்பைகளை வென்று அலமாரியில் அடுக்கி வைத்துள்ள ஆஸ்திரேலியா ஐசிசி தொடர்களின் அசுரன் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட அந்த அணி கடைசியாக 1996 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதன் பின் 1999, 2003, 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகளை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

- Advertisement -

நாங்க இந்தியா இல்ல:

2006, 2009 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. 2015 உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை ஃபைனல்களில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பைகளை வென்றது. இவை அனைத்தையும் விட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் பட் கமின்ஸ் தலைமையில் ஒரே வருடத்தில் 2 முறை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பைகளை வென்றதை இந்தியர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க: 74 ரன்ஸ் லீட் கொடுத்து ஆஸி புயலில் சிக்கிய தெ.ஆ.. இதை செஞ்சு ஜெய்ச்சுடாங்க.. வாழ்த்திய சச்சின்

அப்படி ஃபைனல்களில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு தற்போது 29 வருடங்கள் கழித்து தென்னாபிரிக்கா சாதனை தோல்வியை பரிசளித்துள்ளது. அதே போல கேப்டன் பட் கமின்ஸ் முதல் முறையாக ஒரு ஐசிசி ஃபைனலில் (இந்தியாவுக்கு எதிராக அல்லாத) தோல்வியை சந்தித்துள்ளார். அந்த வகையில் நாங்கள் இந்தியா கிடையாது என்பதை தென்னாபிரிக்கா காண்பித்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement