TNPL 2023 : பாபா இந்திரஜித் அதிரடியில் சேலத்தை வீட்டுக்கு அனுப்பிய திண்டுக்கல் – குவாலிபயர் 1 போட்டியில் மோதப்போவது யார்?

TNPL 26 Baba Indrajith
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 3ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனியில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சேலத்திற்கு கௌசிக் காந்தி 7 (10) ரன்களில் தடுமாறி வருண் சக்கரவர்த்தி சுழலில் கிளீன் போல்டானார். அந்த நிலையில் வந்து சரமாரியாக நொறுக்கிய கவின் 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 25 (9) ரன்கள் எடுத்த போதிலும் அவசரப்பட்டு ரன் அவுட்டாகி சென்றார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் எஸ் அரவிந்த் 26 (25) ரன்களில் அவுட்டானதால் 75/3 என சேலம் தடுமாறியது. அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த சன்னி சந்து அதிரடியாக விளையாடிய போதிலும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மோஹித் ஹரிஹரன் 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போதிலும் மெதுவாகவே விளையாடி 21 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்திரஜித் அதிரடி:
அதே ஓவரில் மறுபுறம் 2 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக விளையாடிய சன்னி சந்து 57 (39) ரன்களில் அவுட்டாக கடைசியில் அட்னன் கான் 10* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் சேலம் 160/8 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கிஷோர் 1 விக்கெட்டும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் ஆரம்பத்திலேயே 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் பாபா இந்திரஜித் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் விமல் குமார் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த வகையில் பவர் பிளே முடிந்தும் தங்களுடைய விக்கெட்டை பரிசளிக்காமல் சேலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடி 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 93 ரன்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த போது 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் விமல் குமார் 42 (36) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இருப்பினும் பாபா இந்திரஜித் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போது அடுத்ததாக வந்த ஆதித்யா கணேஷ் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (13) ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் சேலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறிய பாபா இந்திரஜித் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 83* (50) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 18.2 ஓவர்களிலேயே 163/3 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

மறுபுறம் பேட்டிங்கில் சற்று குறைவான ரன்களை எடுத்து பந்து வீச்சில் போராடியும் வெற்றியை காண முடியாத சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து மட்டும் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 83* ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய பாபா இந்திரஜித் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதை விட இந்த வெற்றியால் தன்னுடைய 7 லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 6 வெற்றிகளை பதிவு செய்த திண்டுக்கல் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க:இனியாச்சும் அதிரடியை மூட்டை கட்டிட்டு ஒழுங்கா விளையாடுவீங்களா? பென் ஸ்டோக்ஸ் அடம் பிடிக்கும் பேட்டி

குறிப்பாக 2வது இடத்தைப் பிடித்ததால் பிளே ஆஃப் சுற்றில் தோற்றாலும் மறு வாய்ப்பை கொடுக்கும் குவாலிபயர் 1 போட்டியில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் கோவையை எதிர்கொள்வதற்கு திண்டுக்கல் தகுதி பெற்றது. மறுபுறம் 7 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த சேலம் புள்ளி பட்டியலில் 7வது இடத்தை மட்டுமே பிடித்து இந்த தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisement