இனியாச்சும் அதிரடியை மூட்டை கட்டிட்டு ஒழுங்கா விளையாடுவீங்களா? பென் ஸ்டோக்ஸ் அடம் பிடிக்கும் பேட்டி

Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி நடை போட்ட இங்கிலாந்து வெளிநாட்டில் சாதிக்க முடியுமா என்ற எழுந்த விமர்சனங்களையும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்து உடைத்தது.

Ben Stokes 1

- Advertisement -

இருப்பினும் தார் ரோட் போல ஃபிளாட்டான பிட்ச்களில் சுமாரான பவுலிங்கை எதிர்கொண்டு போலியான தன்னம்பிக்கையை பெற்ற அந்த அணி கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அந்த போலியான தன்னம்பிக்கையுடன் இந்த தொடரில் தரமான பவுலிங்கை கொண்ட ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்ட இங்கிலாந்து முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 393/8 ரன்களை குவித்து தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு தோல்வியை சந்தித்தது.

மறுக்கும் இங்கிலாந்து:
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வழக்கம் போல விளையாடி ஆஷஸ் கௌரவத்தை காப்பாற்றுமாறு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்தார். குறிப்பாக பழைய ஸ்டைலில் விளையாடிய 20 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வருவதை அவர் சுட்டி காட்டிய நிலையில் ஒரு போட்டிக்காக அசரப் போவதில்லை என்று அறிவித்த பயிற்சியாளர் ப்ரிண்டன் மெக்கல்லம் இத்தொடர் முழுவதும் அதிரடியாகவே விளையாடப் போவதாக கூறினார்.

ENG vs AUS Ben Stokes

அந்த நிலையில் நடைபெற்ற 2வது போட்டியில் 188/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இங்கிலாந்து அதன் பின் ஆஸ்திரேலியா விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் நிதானத்தை வெளிப்படுத்தாமல் ஸ்டைலுக்காக அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களுக்கு சுருண்டது தோல்வியை கொடுத்தது. அதனால் இது முட்டாள்தனமான பேட்டிங் என்று மைக்கேல் வாகன் விமர்சித்த நிலையில் இங்கிலாந்து மூளையின்றி ஈகோவுடன் விளையாடுவதாக ஜெஃப்ரி பாய்காட் சாடினார்.

- Advertisement -

அதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே இத்தொடரை வென்று கௌரவத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இங்கிலாந்து இனியாவது வழக்கமான ஸ்டைலில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கிலும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் வென்ற தாங்கள் அடுத்து வரும் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 3 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்று காட்டுவோம் என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் தங்களது முடிவில் விடாப்பிடியாக நிற்கும் வகையில் பேசியுள்ளார்.

Ben Stokes

இது பற்றி 2வது போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சூழ்நிலைகளை நாங்கள் இதற்கு முன் சந்தித்த காலங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். 2019 ஹெண்டிங்க்லே போல இப்போட்டியில் முயற்சித்தும் எங்களால் வெற்றி காண முடியவில்லை. நாங்கள் வெற்றிக்கு போராடியும் ஆஸ்திரேலியா அவர்களின் திட்டத்தை மாற்றினர். அதனால் நான் இந்த மைதானத்தின் பெரிய பகுதியை குறி வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். இப்போட்டி மிகச் சிறந்தது என்றாலும் இந்த தோல்வியை மறக்க வேண்டியுள்ளது”

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

“தற்போது நாங்கள் 2 – 0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தாலும் இன்னும் 3 போட்டிகள் இருக்கிறது. நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2 – 0 என்ற இடத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் வென்றோம். எனவே அந்த தன்னம்பிக்கை இன்னும் எங்களிடம் இருக்கிறது. அதன் காரணமாக 3 – 2 என்ற கணக்கில் இத்தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement