TNPL 2023 : அஸ்வின் தலைமையில் டாப்பராக அசத்தும் திண்டுக்கல் – சொந்த மண்ணில் மதுரையை சுருட்டி வீசியது எப்படி

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 18ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மதுரைக்கு சரவணக்குமார் வீசிய முதல் ஓவரிலேயே கார்த்திக் 4 (5) ரன்களில் கிளீன் போல்ட்டானார். இருப்பினும் அடுத்து வந்த ஜெகதீசன் கௌசிக்குடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிசாந்த் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து சரிவை சரி செய்த அவர் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 24 (26) ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய கௌஷிக் அடுத்த சில ஓவர்களில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (34) ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். அதை பயன்படுத்திய திண்டுக்கல் பவுலர்கள் அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 12, சுவப்பனில் சிங் 0, தீபன் லிங்கேஸ் 9, சுதன் காந்திபன் 0, முருகன் அஸ்வின் 10 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி 19.3 ஓவர்களிலேயே வெறும் 123 ரன்களுக்கு சுருட்டினர்.

- Advertisement -

அசத்தும் திண்டுக்கல்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சரவணகுமார் மற்றும் சுபோத் பாத்தி தலா 3 விக்கெட்டுகளும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மதிவாணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 124 என்ற சுலபமான இலக்கை துரத்திய திண்டுக்கல்லுக்கு சிவம் சிங் 9, விமல் குமார் 6, எஸ் அருண் 3 என டாப் 3 பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த குர்ஜப்நீத் சிங் மிரட்டலை கொடுத்தார். அதனால் 32/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக களமிறங்கிய பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்தார்.

மறுபுறம் ஆதித்யா கணேஷ் கம்பெனி கொடுக்கும் வகை நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கை கொடுத்து திண்டுக்கல் வெற்றியை நோக்கி பயணிக்க உதவினார். அதை பயன்படுத்தி இந்திரஜித் தொடர்ந்து மதுரை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அரை சதமடித்து வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக 19.3 ஓவரிலேயே 123/7 ரன்கள் எடுத்த திண்டுக்கல் தடுமாறாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. குறிப்பாக ஆதித்யா கணேஷ் 22* (22) ரன்கள் எடுக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த பாபா இந்திரஜித் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 78* (48) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அதனால் பேட்டிங்கில் சொதப்பி பெரிய ரன்களை எடுக்க தவறிய மதுரைக்கு அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் மட்டுமே 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட வெறும் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சுபோத் பாத்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:வரலாற்றில் இன்று : கபில் தேவ் 175 மாஸ் பேட்டிங் வீடியோ பிபிசி ஸ்ட்ரைக்கால் மிஸ் ஆகல – உண்மையான காரணம் இதோ

மேலும் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நடப்பு சாம்பியன் சேப்பாக்கத்தை முந்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்த மதுரை புள்ளி பட்டியலில் 8வது இடத்தை பிடித்து தடுமாறுகிறது. எனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அந்த அணி எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement