எனக்காக அந்த பர்மிஷன் கொடுத்த டீம் மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நன்றி – புது மாப்பிள்ளை டேவான் கான்வே

MS Dhoni Devon Conway
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகிறது. அந்த வகையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

CSK

- Advertisement -

ஜடேஜா தலைமையில் அடுத்தடுத்து தோல்விகளால் திணறிய அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக திரும்பிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 202/2 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோரை இந்த வருடத்தின் முதல் போட்டிக்குப் பின் மீண்டும் தொடக்க வீரர்களாக தோனி களமிறக்கினார்.

கலக்கிய ருதுராஜ்:
அந்த வகையில் முதல் ஓவரிலிருந்தே பட்டாசாக பேட்டிங் செய்த அந்த ஜோடி ஹைதராபாத்தை சரமாரியாக அடித்து முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 99 (57) ரன்கள் எடுத்த ருத்ராஜ் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற சாதனையைப் படைத்த இவர்களில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த டேவோன் கான்வே 85* (55) ரன்களை விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

அதை தொடர்ந்து 203 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எவ்வளவோ போராடியும் 189/6 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. அந்த அணிக்கு அபிஷேக் சர்மா 39 (24) வில்லியம்சன் 47 (37) ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து வந்தா ராகுல் திரிபாதி 0 (1) ஐடன் மார்க்ரம் 17 (10) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 64* (33) ரன்கள் குவித்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் அந்த அணி போராடி தோற்றது. சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கலக்கிய முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

புது மாப்பிளை கான்வே:
இந்த சிறப்பான வெற்றிகு 99 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் 85* (55) ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வேயும் சென்னையின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஏனெனில் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான சென்னையின் முதல் போட்டியில் அறிமுகமாக ஐபிஎல் தொடரில் கால் பதித்த அவர் முதல் போட்டியிலேயே 1 ரன்னில் அவுட்டானதால் அதன்பின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

அந்த நிலைமையில் கடந்த வாரம் நீண்ட நாள் காதலியான கிம் மற்றும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைக் கொண்டாடும் வகையில் சென்னை அணி நிர்வாகம் சிறிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் எம்எஸ் தோனி உட்பட அனைவரும் பங்கேற்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அத்துடன் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடி வரும் அவரின் திருமணம் சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றதால் சென்னை அணியை விட்டு விட்டு திருமணத்திற்காக தென்னாபிரிக்கா சென்றிருந்தார்.

- Advertisement -

ஹனிமூன் போகல:
அதன்பின் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தை முடித்து விட்டு உடனடியாக சென்னை அணிக்கு திரும்பிய அவருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திய புது மாப்பிள்ளை டேவோன் கான்வே அதிரடியாக பேட்டிங் செய்து சென்னையின் வெற்றிக்கு பங்காற்றினார். இந்நிலையில் திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூன் கூட செல்லாமல் சென்னையின் வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

conway

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜோகன்னஸ்பர்க்கில் எனது குடும்பம் மற்றும் நண்பர்களை பார்த்து திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு அனுமதி கொடுத்தது மிகச் சிறப்பானது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும் வெறும் ஒருநாள் ஹனிமூனுக்கு பின் திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையிலேயே மீண்டும் இங்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக எனது மனைவி தற்போது என்னுடன் இல்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒருசில வாரங்கள் இருந்துவிட்டு பின்பு நியூசிலாந்து வரவுள்ளார்.

இதையும் படிங்க : 99 ரன்கள் அடித்தபோதும் டீம் மீட்டிங்கில் ருதுராஜை எச்சரித்த தோனி. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

மேலும் ‘உனக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பளிப்போம் என்பதால் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து தயாராக இரு’ என்று சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துக் கொண்டே இருந்தார். அந்த வாய்ப்பு திருமணம் முடிந்ததும் கிடைத்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

Advertisement