99 ரன்கள் அடித்தபோதும் டீம் மீட்டிங்கில் ருதுராஜை எச்சரித்த தோனி. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

ruturaj
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் நான்கு வீரர்களாக ஜடேஜா, தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. இதில் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனை போன்று இந்த சீசனிலும் அமர்க்களமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி 73 ரன்களை அடித்திருந்தார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

அதனை தவிர்த்து மற்ற போட்டிகளில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகியதும் மீண்டும் தோனி தலைமையில் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் மீண்டும் தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 57 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி என 99 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஒரு ரன்னில் அவர் சதத்தை தவறவிட்டு இருந்தாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் செஞ்சுரி அடித்ததற்கு சமம் என்று அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ருதுராஜின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவர் மீது இன்னும் முழு திருப்தி அடையவில்லை என்று டீம் மீட்டிங்கின் போது மகேந்திர சிங் தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Ruturaj Gaikwad

இது குறித்த விவரமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு டீம் மீட்டிங்கில் கலந்து கொண்ட தோனி பேசுகையில் கான்வே மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரையும் பாராட்டியுள்ளார். இவர்கள் இருவரும் அதிரடி காட்ட வில்லை என்றால் வெற்றி கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் ருதுராஜின் ஆட்டத்தை நான் ஒரு கவலைக்குரிய விடமாக பார்க்கிறேன். ஏனெனில் புனே மைதானத்தில் மட்டுமே ரன்களை அடிக்கும் அவர் மும்பை மைதானங்களில் பேட்டிங் செய்ய தடுமாறி வருகிறார். இதுபோன்று விளையாடினால் இந்திய அணி உங்களை தேர்வு செய்வது கடினம். ஏனெனில் மும்பை மைதானத்தில் நீங்கள் தடுமாறி வருவதை பி.சி.சி.ஐ கவனித்து வரும்.

இதையும் படிங்க : ஒரு ஓவர்ல 4 சிக்ஸ் போனா கூட பரவாயில்ல. ஆனா – பவுலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ள கேப்டன் தோனி

இதனால் உங்களுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பறிபோகலாம். எனவே இனிவரும் போட்டிகளில் மும்பை மைதானங்களிலும் நன்றாக ஆடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் அளவில் தோனி அறிவுரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement