ஒரு ஓவர்ல 4 சிக்ஸ் போனா கூட பரவாயில்ல. ஆனா – பவுலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ள கேப்டன் தோனி

Dhoni
- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகியதை தொடர்ந்து மீண்டும் முன்னாள் கேப்டன் தோனி நடைபெற்று முடிந்த சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக தலைமை வகித்தார். இந்த தொடரில் முதல் 8 போட்டிகளில் ஜடேஜா தலைமையில் விளையாடிய சென்னை அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று ஆபத்தான நிலையில் இருந்த வேளையில் மீண்டும் கேப்டன் பதவியை கையில் எடுத்த தோனி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

- Advertisement -

அந்தவகையில் நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 202 ரன்கள் குவிக்க பின்னர் 203 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 189 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தங்களது 3-வது வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் முன்கூட்டியே போட்டியை முடித்திருக்க வேண்டும். ஆனால் நிறைய ரன்களை சென்னை அணியின் பீல்டர்கள் தங்களது மோசமான பீல்டிங் மூலம் தவற விட்டனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி கூறுகையில் : இந்த இலக்கு எதிரணியை சுருட்ட போதுமான ஓன்று தான். இருப்பினும் இதுபோன்ற ஹை ஸ்கோரிங் போட்டிகளில் சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியம்.

Mukesh Chowthry CSK

ஏனெனில் ஓரிரு ஓவர்களில் அதிக ரன்கள் சென்றால்கூட போட்டி கடினமாகவே இருக்கும். இந்த மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதேபோன்று மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசினர். இந்த போட்டியில் நான் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்த அட்வைஸ் ஒன்றுதான். அதன்படி ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றால் கூட பரவாயில்லை மீதமுள்ள 2 பந்துகளை சரியாக வீசி ரன்களை கசிய விடக்கூடாது என்று பவுலரிடம் கூறியிருந்தேன்.

- Advertisement -

ஏனெனில் இரண்டு ஓவர்களில் அதிகமாக ரன்கள் சென்றாலும் குறிப்பிட்ட சில பந்துகளை நாம் ரன் எதுவும் கொடுக்காமல் சிறப்பாக வீசினால் நிச்சயம் எதிரணிக்கு அழுத்தம் உருவாகும். அந்த வகையில் இந்த போட்டியில் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இருப்பினும் கூடுதலாக சில ரன்கள் ஒரு சில தவறுகளால் கசிந்து விட்டன என்று தோனி கூறினார்.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி எது தெரியுமா? – வெளியான புள்ளி விவரம்

மேலும் ஜடேஜா குறித்து பேசிய அவர் : ஜடேஜாவிற்கு கடந்த ஆண்டே சென்னை அணியின் கேப்டனாக வருவார் என்பது தெரியும். அப்படி அவர் கேப்டனாக மாறிய பின்னர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே நான் சில ஆலோசனைகளை வழங்கினேன். மற்றபடி அடுத்தடுத்த போட்டிகளில் அவராகத்தான் முடிவெடுத்தார் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement