இதான் சிஎஸ்கே மனசு.. காயத்தால் நாடு திரும்பாமல் சென்னைக்கு வந்த டேவோன் கான்வே.. காரணம் என்ன

Devon Conway
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர துவக்க வீரர் டேவோன் கான்வே காயத்திலிருந்து விலங்கியுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து குஜராத்துக்கு எதிரான ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று சென்னை அணி 5வது கோப்பையை வென்று சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் இம்முறை காயத்தை சந்தித்த அவர் ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் விளையாடுவார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2024 ஐபிஎல் தொடரிலிருந்து டேவோன் கான்வே முழுமையாக விலகுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசன் 50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் கான்வே:
இந்நிலையில் காயத்தால் ஒரு போட்டியில் கூட விளையாடாத டேவோன் கான்வே நாடு திரும்பாமல் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து விளையாடி வருகிறது. எனவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கான்வே நியூசிலாந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அதை செய்யாத அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்து சிஎஸ்கே அணியில் காயத்திலிருந்து குணமடைவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளார். மறுபுறம் தங்களுக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் கடந்த வருடம் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் காயத்திலிருந்து குணமடைவதற்கான முழு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இது பற்றி சேப்பாக்கம் மைதானத்தில் டேவோன் கான்வே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் சிகிச்சை மேற்கொண்டு வரும் டேவோன் கான்வே விரைவில் குணமடைந்து நியூசிலாந்துக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் இதுதான் எங்கள் அணியின் மனசு என்று சென்னை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அவங்க ப்ளானை உடைக்க தோனி ரெடியா இருப்பாரு.. சேப்பாக்கம் கோட்டையிலும் சென்னைக்கு ஆபத்திருக்கு.. ஹசி பேட்டி

இதைத் தொடர்ந்து சென்னை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஏப்ரல் 23ஆம் தேதி லக்னோவை எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் சென்னை 4 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. எனவே கடந்த போட்டியில் தோல்வியை கொடுத்த லக்னோவை இப்போட்டியில் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்ப முனைப்புடன் சிஎஸ்கே விளையாட உள்ளது.

Advertisement