RR vs PBKS : ஒரு கிரிக்கெட்டரா எல்லாருக்கும் இந்த ஆசை இருக்கும். அதுதான் எனக்கும் இருக்கு – ஆட்டநாயகன் தேவ்தத் படிக்கல்

Padikkal
- Advertisement -

தர்மசாலா நகரில் நேற்று இரவு நடைபெற்ற முக்கியமான 66-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது :

Padikkal 2

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலேயே ஜாஸ் பட்லரின் விக்கட்டை இழந்தது. அதிலும் குறிப்பாக பட்லர் நான்கு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் ஆகியோரது ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. பின்னர் மிடில் ஆர்டரில் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் கை கொடுக்க ராஜஸ்தான் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Padikkal 1

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 51 ரன்கள் குவித்த ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய தேவ்தத் படிக்கல் கூறுகையில் :

- Advertisement -

வலைப்பயிற்சியில் நான் அதிரடியாக விளையாடி பயிற்சிகளை மேற்கொள்வேன். அதன்பிறகு இந்த போட்டியில் தான் அதேபோன்று அதிரடியாக விளையாடியதாக உணர்கிறேன். இந்த தொடருக்கு முன்னர் நான் விளையாட வரும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாட வந்தேன். ஆனால் இந்த தொடர் நான் நினைத்த அளவு சிறப்பாக அமையவில்லை. எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் தாங்கள் விளையாடும் அணி ஜெயிக்க வேண்டும் என்றும் அந்த வெற்றிகளில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இதையும் படிங்க : PBKS vs RR : ஒரு மேட்ச் இப்படி, ஒரு மேட்ச் அப்படின்னா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – ஷிகர் தவான் வருத்தம்

அந்த வகையில் எனக்கும் எனது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. நான் ராஜஸ்தான் அணிக்காக வெவ்வேறு இடங்களில் களமிறங்கியுள்ளேன். தற்போது அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்யும் அளவிற்கு என்னுடைய திறனை வளர்த்துள்ளேன் என தேவ்தத் படிக்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement