PBKS vs RR : ஒரு மேட்ச் இப்படி, ஒரு மேட்ச் அப்படின்னா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – ஷிகர் தவான் வருத்தம்

Dhawan
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

RR vs PBKS

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் : நாங்கள் பவர் பிளேவின் போதே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுவே எங்களின் எங்களை போட்டியில் பின்னடைவுக்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு ஜித்தேஷ் சர்மா, சாம் கரன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த மைதானத்தில் 200 ரன்கள் அடித்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த போட்டியில் எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. எளிய கேட்ச் வாய்ப்புகளையும் நாங்கள் தவறவிட்டது எங்களுக்கு பின்னடைவை தந்தது.

- Advertisement -

ஒரு அணியாக நாங்கள் அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். சில போட்டிகளில் பேட்டிங்கிலும், சில போட்டிகளிலும் பந்துவீச்சிலும் மாறி மாறி நாங்கள் சிறப்பாக செயல்படுவதால் வெற்றிகளை தொடர முடியாமல் போனது. அனைத்து போட்டிகளுமே அனைத்து துறைகளிலும் வீரர்கள் தங்களது பங்களிப்பை அளித்தால் மட்டுமே வெற்றி தொடர்ச்சியாக கிடைக்கும்.

இதையும் படிங்க : IPL 2023 : இம்பேக்ட் விதிமுறை யூஸ் பண்ணி இன்னும் 5 வருஷம் விளையாடுங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு யூசுப் பதான் கோரிக்கை

இந்த தொடரில் இருந்து நாங்கள் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டோம். தற்போது இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கும் எங்களது அணி நிச்சயம் இனிவரும் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement