WTC Final : அவர செலக்ட் பண்ணாம கோப்பை ஜெயிக்கும் ட்ரிக்கை தேர்வுக்குழு மிஸ் பண்ணிட்டாங்க – கும்ப்ளே ஆதங்கம்

- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 – 11 வரை வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த முறை சௌதம்டன் நகரில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் சொதப்பலாக செயல்பட்டு தவற விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோற்று வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா போராட உள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அஜிங்க்ய ரகானே சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டதால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக எப்போதுமே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள காரணத்தால் தேர்வு செய்யப்பட்டார். அந்த நிலைமையில் ஏற்கனவே விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறிய நிலையில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அறிமுகமாகி சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களிலேயே விக்கெட் கீப்பிங் செய்ய தடுமாறி பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்ட கேஎஸ் பரத்துக்கு பதிலாக கேஎல் ராகுல் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

கும்ப்ளே ஆதங்கம்:
குறிப்பாக ஏற்கனவே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் அவர் 2018, 2021 வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் சதமடித்த அனுபவத்தை கொண்டதால் ஃபைனலில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் காயத்தால் ராகுல் வெளியேறியது மீண்டும் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்த நிலையில் அவருக்கு பதிலாக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் வங்கதேசத்துக்கு எதிரான இரட்டை சதத்தை தவிர்த்து இந்திய மைதானங்களிலேயே தடுமாறும் அவர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற தரமான ஆஸ்திரேலிய பவுலர்களிடம் நிச்சயமாக தடுமாறுவார் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் அது போன்ற சூழ்நிலைகளில் ரிஷப் பண்ட்டை விட தோனிக்கு நிகரான அனுபவத்தை கொண்ட ரிதிமான் சஹா தற்போதைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் விக்கெட் கீப்பிங்கில் அசத்துவதுடன் பேட்டிங்கிலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

எனவே ரஹானேவை போல சஹாவை தேர்வு செய்யாததால் இம்முறையும் இந்தியாவுக்கு கோப்பை கிடைக்கப் போவதில்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் கேஎஸ் பரத் இருந்தாலும் சஹாவை தேர்வு செய்யாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கோப்பையை வெல்லும் டிரிக்கை இந்திய தேர்வுக்குழு தவற விட்டுள்ளதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் சஹாவை பாருங்கள். இந்த சீசன் முழுவதும் அவர் ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் முன்னால் பேட்ஸ்மேனாகவும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஸ்டம்புகளுக்கு பின்னால் அவர் வெளிப்படுத்தும் நல்ல செயல்பாடுகள் யாராலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர் மிகச் சிறந்த இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒருவர். அப்படிப்பட்ட அவரை தேர்வு செய்யாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றிக்கான ட்ரிக்கை தேர்வு குழுவினர் தவற விட்டுள்ளதாக நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க:IPL 2023 : எனக்கு தோனி கொடுத்த சிம்பிள் அட்வைஸ் அது தான் – புதிய ஃபினிஷராக அசத்தும் ரிங்கு சிங் ஓப்பன்டாக்

“அவர் இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். அணியில் இருக்கும் கேஎஸ் பரத் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியவர் என்பதை நான் அறிவேன். ஆனால் ரித்திமான சஹா விக்கெட் கீப்பராக கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு அனுபவத்தை கொண்டவர். தற்போது அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

Advertisement