- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூரியகுமாருக்கு அப்றம் விராட் கோலி.. மாதிரி திறமையான அவரை டி20 கேப்டனா போடுங்க.. தேவங் காந்தி அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் டி20 கிரிக்கெட்டில் விடைபெற்ற ரோஹித்துக்கு பின் ஹர்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அதற்கு முந்தைய வருடங்களில் ரோஹித் இல்லாத போது பாண்டியா தான் டி20 கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இருப்பினும் புதிய பயிற்சியாளராக வந்த கௌதம் கம்பீர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி ஹர்திக் பாண்டியாவை தலைமைப் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக நீக்கினார். அத்துடன் சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அவர் பரிந்துரைத்தார். அப்போதிலிருந்து சூரியகுமார் தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஓரளவு நன்றாக விளையாடி வெற்றிகளைப் பெற்று வருகிறது.

- Advertisement -

சூரியகுமாருக்கு பின்:

இதை அடுத்து 2026 டி20 உலகக் கோப்பையில் சூரியகுமார் தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது. இருப்பினும் தற்போது 34 வயதாகும் சூரியகுமார் நீண்ட காலம் டி20 கேப்டனாக செயல்பட முடியாது. எனவே சூரியகுமாருக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்கத் துவங்கியுள்ள சுப்மன் கில்லை அடுத்த டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் தேவங் காந்தி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2017இல் விராட் கோலி கொண்டிருந்த அதே ஒளியை கில் கட்டமைக்கத் துவங்கியுள்ளார். எம்எஸ் தோனியின் கீழ் விராட் கோலி வளர்க்கப்பட்டார். விராட் போலவே கில்லும் தற்போது தனது உச்சத்தில் இருக்கிறார். விராட் போலவே அவரும் தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள கேப்டன்ஷிப் பொறுப்பின் மீது ரியாக்ட் செய்துள்ளார்”

- Advertisement -

அடுத்த டி20 கேப்டன் கில்:

“சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாக நியமித்து அஜித் அகர்கர் நல்ல தொலைநோக்குப் பார்வையை காண்பித்துள்ளார். எனவே கில் டி20 கேப்டனாக நியமிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. சூரியகுமாருக்குப் பின் யார் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதில் தெளிவான மெசேஜ் இருக்க வேண்டும். மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் நீண்ட காலம் ஸ்ப்லிட் கேப்டன்ஷிப் வேலை செய்யாது”

இதையும் படிங்க: கிங் கோலியுடன் சேத்து பேசியே பாபர் அசாமை முடிச்சுட்டாங்க.. அவரை தோனியுடன் கூட ஒப்பிடாதீங்க.. சேஷாத் பேட்டி

“ஏனெனில் நீங்கள் சிந்தனை செயல்பாட்டில் ஸ்திரத்தன்மையை விரும்புவீர்கள். உங்களிடம் உள்ள திறமையான ஆல் ஃபார்மட் பிளேயர் ஒரு போட்டியில் தலைமைத் தாங்கும் போது, மற்றொரு ஃபார்மட்டிலும் தலைமைத் தாங்குவது கடினமாக இருக்காது. சுப்மன் கில் பேட்ஸ்மேனாக அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளார். அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக இருக்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -