வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1 – 2 (3) என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக 3வது போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் எதிராக தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் 1991க்குப்பின் 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது.
மறுபுறம் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 23 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஒரு காலத்தில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று அவரை பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடினார்கள்.
கம்பேர் பண்ணியே முடிச்சுட்டாங்க:
ஆனால் அதற்கு நிகராக செயல்படாத அவர் மோசமாக விளையாடி பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமானார். அதனால் கேப்டன்ஷிப் பதவியை இழந்த பாபர் அசாம் தற்போது சாதாரண பேட்ஸ்மேனாகவும் அசத்த முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக கடந்த 2023க்குப்பின் 71 ஒருநாள் போட்டிகளில் அவர் சதத்தை அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
இந்நிலையில் பாபர் அசாம் போன்ற சாதாரண பேட்ஸ்மேனை விராட் கோலியுடன் ஒப்பிட்டது தவறான விஷயம் என்று பாகிஸ்தான் வீரர் அஹ்மத் சேஷாத் கூறியுள்ளார். அந்த ஒப்பீடுகளால் ஏற்பட்ட அழுத்தத்தாலேயே பாபர் தடுமாறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தோனியுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
தோனியுடன் கூட ஒப்பிடாதீங்க:
“அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த போது நீங்கள் வீரர்களை ஒப்பிடும் பிரச்சாரத்தைச் செய்தீர்கள். தற்போது நல்ல செயல்பாடுகள் வராததால் 2 வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஏன் கூடாது? ஏனெனில் விராட் கோலி உலகின் எந்த வீரர்களாலும் ஒப்பிட முடியாதவர். அவர் இந்த தலைமுறையின் லெஜெண்ட், ரோல் மாடல்”
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் நல்லா தான் ஆடுனீங்க.. ஆனாலும் தள்ளியே இருங்க.. கே.எல் ராகுலுக்கு – பறந்த மெசேஜ்
“சொல்லப்போனால் அவரை நீங்கள் எம்.எஸ். தோனியுடன் கூட ஒப்பிட முடியாது. தோனி மகத்தான கேப்டனாக இருக்கலாம். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக, கிரிக்கெட்டராக, விளையாட்டு வீரராக விராட் கோலி தனியாக நிற்பார். யாரையும் யாருடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அது நியாயமற்ற அழுத்தத்தை உண்டாக்கும். அதையே நாம் தற்போது பாபர் அசாமிடம் பார்க்கிறோம்” என்று கூறினார்.



