பலமா இருந்த டெல்லி கேபிட்டல்ஸ் இப்போ வீக்கா மாறிடுச்சு, கப் அடிப்பது கடினம் – முன்னாள் வீரர்களின் கணிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

ipl trophy

- Advertisement -

முதல் கப் அடிக்குமா டெல்லி:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழு மூச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னை கிங்ஸ் தனது கோப்பையை தக்க வைப்பதற்காக கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இதர அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் இந்த வருடம் முதல்முறையாக கோப்பையை முத்தமிட தீவிரமாகப் போராட உள்ளது. குறிப்பாக சமீப காலங்களாக கோப்பையை நெருங்கிய போதிலும் கையில் ஏந்த முடியாத டெல்லி கேபிட்டல்ஸ் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற முயற்சியில் இம்முறை களமிறங்க உள்ளது.

dc

வீக்கா மாறிடுச்சு:
இந்நிலையில் கடந்த வருடம் இருந்ததை விட இந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பலவீனமாக மாறிவிட்டதாக முன்னாள் இந்திய வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆகாஷ் சோப்ரா தெரிவித்தது பின்வருமாறு. “அவர்கள் குல்தீப் யாதவை வாங்கியுள்ளார்கள். ஆனால் தரமான அஸ்வினை விடுவித்துள்ளார்கள். மேலும் இதற்கு முன் அவர்களிடம் அமித் மிஸ்ரா இருந்தார். ஆனால் தற்போது லலித் யாதவ் மற்றும் பிரவின் துபே ஆகியோரை வைத்து சமாளிக்க வேண்டும்.

- Advertisement -

அதேப்போல பேட்டிங்கில் அவர்கள் தரமான ஷிகர் தவானை விட்டுவிட்டு யாஷ் துள், ஸ்ரீகர் பரத், மந்தீப் சிங் ஆகியோரை எடுத்துள்ளார்கள். மேலும் ஒரே ஒரு தரமான ஸ்ரேயாஸ் அய்யர் என்பதால்தான் அவர் 12.25 கோடிக்கு ஏலம் போனார். அவருக்கு பதில் வாங்கப்பட்ட சர்ப்ராஸ் கான் அவரின் இடத்தை கண்டிப்பாக நிரப்ப முடியாது. எனவே திறமைகளின் அடிப்படையில் டெல்லி அணி பலமாக உள்ளது என்றாலும் தரத்தின் அடிப்படையில் ஷ்ரேயஸ் ஐயர், தவான், அஷ்வின் ஆகியோரை கோட்டை விட்டுவிட்டார்கள்” என கூறினார்.

chopra

அவர் கூறுவது போல ஆரம்ப காலங்களில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெற முடியாமல் தவித்து வந்த டெல்லியை கடந்த 2020-ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் அய்யர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதற்கு அடுத்த வருடம் அவர் காயம் அடைந்த காரணத்தால் மற்றொரு இளம் வீரர் ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

- Advertisement -

கோட்டைவிட்டதா டெல்லி கேப்பிட்டல்ஸ்:
இருப்பினும் அதன்பின் காயத்தில் இருந்து குணமடைந்த போதிலும் ஷ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன்ஷிப் வழங்காத அந்த அணி நிர்வாகம் தற்போது அவரைத் தக்க வைக்காமலும் எதிரணியிடம் கோட்டை விட்டது. அதனால் 12.25 கோடிக்கு அவரை தட்டித் தூக்கிய கொல்கத்தா தங்களின் புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

இதையும் படிங்க : எனக்கும் தோனிக்கும் பகையா ! யார் சொன்னது? – தலைகீழாக மாறி நட்பை தெளிக்கும் கெளதம் கம்பீர்

அது மட்டுமல்லாமல் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் 2020-ஆம் ஆண்டு அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களையும் தக்க வைக்காத அந்த அணி நிர்வாகம் தென்னாபிரிக்க அதிரடி வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடாவையும் நழுவ விட்டுவிட்டு இளம் வீரர்களை வாங்கியுள்ளது. இதனால் கடந்த சீசனை விட இந்த வருடம் சற்று பலவீனமாக காணப்படும் அந்த அணியால் கோப்பையை வெல்வது சற்று கடினம் என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி வாசிம் ஜாபர் கூறியது பின்வருமாறு. “ஏலத்தின் போது டெல்லி அணி நிர்வாகம் தவறான அணுகு முறையைக் கையாண்டது. அவர்கள் 8 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம் என்ற நிலையில் 7 பேரை மட்டும் வாங்கினர். டெல்லி அணியில் கடந்த வருடம் இருந்த தரம் இப்போது இல்லை என்பதே உண்மையாகும். இருப்பினும் 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் நிறைய இளம் வீரர்கள் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நல்ல பார்மில் இருக்கும் சர்ப்பிராஸ் கான் போன்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

Advertisement