எனக்கும் தோனிக்கும் பகையா ! யார் சொன்னது? – தலைகீழாக மாறி நட்பை தெளிக்கும் கெளதம் கம்பீர்

Gambhir-1
- Advertisement -

கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் முறையாக ஜாம்பவான் கபில்தேவ் உலக கோப்பையை வென்ற பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற எத்தனையோ தரமான வீரர்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் இந்திய அணி ஒரு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த வேளையில் கடந்த 2007-ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி யாருமே எதிர்பாராத வண்ணம் தென்னாப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

தோனியும் – கம்பீரும்:
அதன்பின் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையையும் வென்று காட்டிய அவர் 1983-க்கு பின் 28 வருடங்களாக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த இந்திய ரசிகர்களின் உலக கோப்பை எனும் கனவு மற்றும் தாகத்தைத் தணித்தார் என கூறலாம். இந்த 2 உலகக் கோப்பைகளையும் எம்எஸ் தோனி கேப்டனாக வெல்வதற்கு யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் மிக மிக முக்கிய பங்காற்றியவர்கள் என்றே கூறலாம். இந்த 2 கோப்பைகளிலுமே யுவராஜ் சிங் ஆல் – ரவுண்டராக அசத்தினார் என்றால் டாப் ஆர்டர் பேட்டிங்கில் கௌதம் கம்பீர் முக்கியமான ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

குறிப்பாக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் 2011 உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் அவர்தான் டாப் ஸ்கோர் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அந்த 2 போட்டிகளிலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தடுமாறிய வேளையில் கௌதம் கம்பீர் தான் நங்கூரமாக பேட்டிங் செய்து 97 ரன்கள் குவித்து வெற்றியை நெருங்கியபோது சதம் அடிக்க முடியாமல் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கி விக்கெட்களை விடாமல் 91* ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்து வெற்றி பெற செய்த எம்எஸ் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் உலகக் கோப்பை என்று வரும்போது எம்எஸ் தோனியின் பெயர் தான் அதிகமாக வருகிறதே தவிர கௌதம் கம்பீர் பெயர் வருவது கிடையாது.

2011-final

இது மட்டுமல்லாமல் 2011 உலகக் கோப்பைக்குப்பின் கௌதம் கம்பீர் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு பதில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு ஒரு கேப்டனாக தோனி அதிக வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கினார். அதன் காரணமாக இன்று இந்திய அணி ஒரு வளமான எதிர்காலத்தை பெற்றுள்ளது என்றாலும் அதற்காக கௌதம் கம்பீர் உள்ளிட்ட ஒரு சில முன்னாள் வீரர்கள் தொடர்ந்து அவர் மீது மறைமுகமான குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் ரன்கள் அடிக்க முடியாமல் திணறி வரும் தோனியை “முடிந்து போன பினிசர்” என்பது போன்ற விமர்சனங்களை கௌதம் கம்பீர் தெரிவித்து வந்தார். மேலும் 2011 உலகக்கோப்பையில் தனது பெயருக்கு பதிலாக டோனியின் பெயர் அதிகமாக பயன்படுத்துவதால் பொறாமை கொண்ட அவர் அதை மனதில் வைத்துக்கொண்டு சமீப காலங்களில் பெரும்பாலான நேரங்களில் தோனிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கௌதம் கம்பீர் என்றால் இப்படித்தான், அவருக்கு தோனியை பிடிக்காது, அவர்கள் இருவருக்கும் சண்டை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.

- Advertisement -

நல்ல நண்பன்:
இந்நிலையில் எம்எஸ் தோனி தனது மிகச் சிறந்த நண்பன் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்று அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவர் மீது எனக்கு தனி மரியாதை உள்ளது. அது எப்போதுமே தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இதை நான் பலமுறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். தேவைப்பட்டால் இதை 138 கோடி இந்திய மக்களின் முன்பு கூறுவேன். அதேபோல் அவருக்கு எந்த உதவியும் தேவைப்படாது என நினைக்கிறேன். ஒருவேளை அவரின் வாழ்வில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அந்த இடத்தில் நான் முதல் ஆளாக அவருக்கு உதவி செய்ய நிற்பேன். ஏனெனில் அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக பல மகத்தான பணிகளைச் செய்த நல்ல மனிதர்”

Gambhir-1

“முதலில் ஒருவரின் கருத்திற்கும் மரியாதைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு போட்டியை நீங்கள் ஒரு கோணத்தில் பார்க்கலாம், நான் வேறு ஒரு கோணத்தில் பார்ப்பேன். அந்த வகையில் ஒரு போட்டியின் மீது எனக்கு ஒரு கருத்து இருக்கும். அவரின் பார்வையில் அவருக்கு ஒரு கருத்து இருக்கும். சொல்லப்போனால் அவர் கேப்டனாக செயல்பட்ட போது அவருக்கு உதவியாக நீண்ட நாட்களாக நான் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே போல் எதிரெதிர் அணிகளில் விளையாடும்போது எங்களுக்கு இடையே சண்டைகள் இருக்கும். ஆனால் அவர் மீது எனக்கு இருக்கும் மரியாதை எப்போதுமே உள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல கிரிக்கெட்டர்” என பாராட்டினார்.

கம்பீரா இது:
சமீப காலங்களில் ஒரு போட்டியின் அடிப்படையில் தனது கருத்தை தான் அவர் மீது தெரிவித்ததாக கூறியுள்ள கௌதம் கம்பீர் அந்தக் கருத்துக்கள் தோனிக்கு எதிராக இருந்தாலும் ஒரு நல்ல மனிதரான அவர் மீது இருக்கும் மரியாதை என்றுமே குறையாது என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தனது வாழ்நாளில் பெரும்பாலும் மிடில் ஆடர் பேட்டியில் விளையாடிய தோனி டாப் ஆர்டரில் விளையாடி இருந்தால் பல சாதனைகளை உடைத்திருப்பார் என கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் மறுபடியும் கூறுகிறேன். அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் நிறைய சாதனைகளை உடைத்திருப்பார். அந்த இடத்தில் விளையாடிய பல ஜாம்பவான்களை பற்றி பேசுகிறோம். அந்த வகையில் அந்த இடத்தில் அவர் விளையாடி இருந்தால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருப்பார்” எனக் கூறினார்.

Gambhir

அவர் கூறுவது போல ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் நம்பர் 3 இடத்தில் விளையாடிய தோனி அதில் 993 ரன்களை 82.75 என்ற அபாரமான சராசரி விகிதத்தில் குவித்தார். குறிப்பாக அவரின் அதிகபட்ச ஸ்கோரான 183* ரன்களை அந்த இடத்தில் களமிறங்கி தான் அவர் அடித்திருந்தார். இருப்பினும் விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக மிடில் ஆர்டரில் விளையாடினார். மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து தோனியை பற்றி கௌதம் கம்பீர் இவ்வாறு பேசியதை பார்த்த இந்திய ரசிகர்கள் கெளதம் கம்பீரா என வாயடைத்துப் போகிறார்கள்.

Advertisement