IND vs NZ : பேட்டிங்ல மிஸ் பண்ணாலும் பவுலிங்ல பேலன்ஸ் பண்ணி எஸ்கேப் ஆயிட்டாரு – மச்சம் இருக்கு

Deepak-Hooda-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியானது மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது.

INDvsNZ

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதோடு இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே அடுத்த 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

Deepak Hooda

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதோடு சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தீபக் ஹூடாவை சேர்த்தது தவறு என்று கூறப்பட்டது.

- Advertisement -

அதன்படியே இந்த போட்டியில் பேட்டிங்கில் ஆறாவது வீரராக களம் புகுந்த தீபக் ஹூடா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இப்படி பேட்டிங்கில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அவர் வெளியேறி இருந்தாலும் பந்துவீச்சின் போது சிறப்பாக செயல்பட்ட அவர் 2.5 ஓவர்கள் வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : IND vs NZ : இப்படி ஒருத்தர் விளையாடி நான் பார்த்ததே இல்ல. தோல்விக்கு பிறகு இந்திய வீரரை வாழ்த்திய – கேன் வில்லியம்சன்

அதிலும் குறிப்பாக 19-வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இப்படி பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டதால் நிச்சயம் அடுத்த போட்டியிலும் அவர் இடம்பிடிப்பார் என்றே தெரிகிறது.

Advertisement