IND vs NZ : இப்படி ஒருத்தர் விளையாடி நான் பார்த்ததே இல்ல. தோல்விக்கு பிறகு இந்திய வீரரை வாழ்த்திய – கேன் வில்லியம்சன்

Kane-Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Kane Willamson IND vs NZ

இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தோல்வி குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த ஆட்டம் எங்களுடைய சிறப்பான ஆட்டம் கிடையாது. சூரியகுமார் யாதவ் நம்ப முடியாத வகையில் விளையாடினார்.

Suryakumar Yadav.jpeg

நான் பார்த்த சிறப்பான இன்னிங்க்ஸ் என்றால் இதனை நிச்சயம் சொல்வேன். ஏனெனில் அந்த அளவிற்கு நம்ப முடியாத பல ஷாட்டுகளை சூரியகுமார் யாதவ் விளையாடினார். இப்படி ஒரு வீரர் விளையாடி நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அந்த அளவிற்கு அவருடைய இந்த ஆட்டம் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

அதேபோன்று நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் துவக்கத்தில் எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தாலும் அதன் பின்னர் மிடில் ஓவர்களில் இந்திய அணியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை. சூரியகுமார் யாதவ் இறுதி வரை விளையாடி போட்டியில் பெரிய மாற்றத்தை தந்து விட்டார். அதன் பின்னர் நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : என்னாங்க இது வீடியோ கேம் மாதிரி இருக்கு – சூர்யகுமாரின் ஆட்டத்தை வியந்து விராட் கோலி பேசியது என்ன (வீடியோ உள்ளே)

இது போன்ற பெரிய போட்டிகளை எதிர்கொள்ளும்போது சிறிய வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருக்க வேண்டும் ஆனால் மிகப் பெரிய வித்தியாசத்தில் நாங்கள் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்திருக்கிறோம் என வில்லியம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement