என்னாங்க இது வீடியோ கேம் மாதிரி இருக்கு – சூர்யகுமாரின் ஆட்டத்தை வியந்து விராட் கோலி பேசியது என்ன (வீடியோ உள்ளே)

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுப்பதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்றது. மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 191/6 ரன்கள் குவித்தது. இஷான் கிசான் 36, ரிஷப் பண்ட் 6, ஷ்ரேயஸ் ஐயர் 13, ஹர்டிக் பாண்டியா 13 என முக்கிய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அதே பவுலர்களை 3வது இடத்தில் களமிறங்கி அசால்டாக எதிர்கொண்டு அடித்து நொறுக்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வேறு ஏதோ மைதானத்தில் விளையாடுவது போல் சரவெடியாக செயல்பட்டு 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 111* (51) ரன்கள் விளாசி இந்தியாவை தூக்கி நிறுத்தினார். நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் ஹார்ட்ரிக் எடுத்த டிம் சவுதி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய அந்த அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

வீடியோ கேம்:
கிளென் பிலிப்ஸ், டேவோன் கான்வே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 61 (52) ரன்கள் எடுத்தார். அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் பெட்ரோல் இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இப்போட்டியில் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சூரியகுமார் மட்டும் தனி ஒருவனாக 111* ரன்கள் விளாசி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டதால் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதை விட “எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா” என்று உள்ளூர் கிரிக்கெட்டில் நண்பர்களுக்கிடையே பேசிக் கொள்வது போல ஒருபுறம் இந்தியாவின் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதற்காக கவலைப்படாத அவர் நியூசிலாந்து பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் தனக்கே உரித்தான பாணியில் மைதானத்தின் நாலாபுறங்களிலும் விதவிதமான சாட்டுகளை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதனாலேயே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான் வீரர்களால் கொண்டாடப்படும் அவர் 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் சூப்பர் ஸ்டார் அணுகு முறையை பின்பற்றி டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்காத இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சூரியகுமாரின் இந்த ஆட்டத்தை நேரலையில் பார்க்க முடியவில்லை என்றாலும் ஹைலைட்ஸ் வழியாக பார்த்ததாகவும் அது வீடியோ கேம் விளையாடிய அனுபவத்தை கொடுத்ததாகவும் ட்விட்டரில் கலகலப்பாக மனதார பாராட்டியுள்ளார். அது சூர்யகுமார் ஏன் உலகின் சிறந்தவர் என்பதை காட்டுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். பொதுவாக ஈஏ போன்ற வீடியோ கிரிக்கெட் விளையாட்டில் வெறித்தனமாக பவுலர்களை அடித்து நொறுக்கும் ரசிகர்கள் 500 – 1000 ரன்களை கணக்கில்லாமல் அடித்து மகிழ்வார்கள்.

அதே போல் இப்போட்டியில் மனிதராக அல்லாமல் ரோபோ மெஷின் போல வீடியோ கேம் போல கற்பனைக்கும் எட்டாத ஷாட்களை 217.65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கியதாக விராட் கோலி அவரை பாராட்டியுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த சூரியகுமாருக்கு ஒருவழியாக கடந்த 2021ஆம் ஆண்டு விராட் கோலி தான் கேப்டனாக இருந்த போது முதல் முறையாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

அப்போது முதல் ரோபோட் போல எதிரணிகளை பந்தாடி வரும் சூரியகுமார் சமீபத்திய உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியையும் மிஞ்சிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டத்தை எதிர்புறம் இருந்து பார்த்து வியந்த விராட் கோலி களத்திலேயே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement