IND vs IRE : ராகுல், ரெய்னாவை முந்தி தீபக் ஹூடா படைத்த வரலாற்று சாதனைகளின் பட்டியல் இதோ

Deepak Hooda 104
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வந்தது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா ஜூன் 26இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூன் 28-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கியது.

IND vs IRE

- Advertisement -

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடி 225/7 ரன்கள் குவித்தது. காயத்தால் விலகிய ருதுராஜ்க்கு பதிலாக நீண்ட நாட்களுக்கு பின் தொடக்க வீரராக இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சனுடன் களமிறங்கிய இஷான் கிசான் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா – சஞ்சு சாம்சனுடன் கைகோர்த்து அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்தார்.

சரவெடி ஹூடா:
3-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 17-வது ஓவர் வரை பட்டாசாக பேட்டிங் செய்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அயர்லாந்து பவுலர்களை பந்தாடி 2-வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 (42) ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 15 (5) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே 9 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் சதத்தை அடித்த தீபக் ஹூடா 104 (57) ரன்களில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Sanju Samson Deepak Hooda

அதை தொடர்ந்து 226 என்ற பெரிய இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் – கேப்டன் ஆண்டி பால்பிரின் ஆகியோர் 72 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். அதில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (18) ரன்களில் ஸ்டெர்லிங் ஆட்டமிழக்க அடுத்து வந்த கெரத் டிலானி டக் அவுட்டாகி ஏமாற்றினார். மறுபுறம் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் பால்பரின் 3 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்டு 60 (37) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா த்ரில்:
அந்த சமயத்தில் வந்த டுக்கர் 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் ஹென்றி டெக்டர் 5 பவுண்டரியுடன் 39 (28) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தார். அப்படி முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்து போராடியதால் வெற்றியை நெருங்கி வந்த அயர்லாந்துக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது இளம் வீரர் உம்ரான் மாலிக் 0, 1 நோபால், 4, 4, 1, 1 பைஸ், 1 என 12 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

IND vs IRE Umran Malik

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய ஜார்ஜ் டாக்ரெல் 34* (16) ரன்களும் மார்க் அடைர் 23* (12) ரன்களும் எடுத்து அயர்லாந்துக்காக முடிந்த அளவுக்கு போராடிய அந்நாட்டு வீரர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை அயர்லாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

ஹூடாவின் சாதனைகள்:
இந்த வெற்றிக்கு 104 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய தீபக் ஹூடா மொத்தமாக இந்த தொடரில் 151 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்த அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கிய போதிலும் தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெறவில்லை.

Hooda-2

இருப்பினும் இந்த தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு பெற்று 47* ரன்களை விளாசிய அவர் நேற்று தனது 3-வது போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த இன்னிங்சில் சதமடித்த இந்திய வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனை அவர் முறியடித்தார். அந்த பட்டியல் இதோ:
1. தீபக் ஹூடா : 3 இன்னிங்ஸ்
2. கேஎல் ராகுல் : 4 இன்னிங்ஸ்
3. சுரேஷ் ரெய்னா : 20 இன்னிங்ஸ்
4. ரோஹித் சர்மா : 36 இன்னிங்ஸ்

- Advertisement -

2. மேலும் அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Deepak Hooda Dinesh karthik IND vs IRE

3. அத்துடன் அயர்லாந்து மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. தீபக் ஹூடா : 104, 2022*
2. ரோஹித் சர்மா : 97, 2018

4. அதுபோக டி20 கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் படைத்தார். முந்தைய சாதனை : சுரேஷ் ரெய்னா – 101, 2010 மற்றும் கேஎல் ராகுல் – 101*, 2018

Deepak Hooda

5. மேலும் இப்போட்டியில் சஞ்சு சாம்சனுடன் 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தார். முந்தைய சாதனை : ரோகித் சர்மா – கேஎல் ராகுல் இலங்கைக்கு எதிராக, 2017

இதையும் படிங்க : IND vs IRE : அயர்லாந்து ரசிகர்கள் அவங்க 2 பேருக்கும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க – கேப்டன் பாண்டியா வியப்பு

6. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதமடிக்கும் இந்திய பேட்ஸ்மேன் என்ற அரிதான சாதனையையும் அவர் படைத்தார். 1933இல் லாலா அமர்நாத் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைக்க 1992இல் தமிழகத்தின் டபிள்யூவி ராமன் 50-வது சதமடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement