IND vs IRE : அயர்லாந்து ரசிகர்கள் அவங்க 2 பேருக்கும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க – கேப்டன் பாண்டியா வியப்பு

Hardik-Pandya
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தற்போது அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற வேளையில் அந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அயர்லாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Team India Dinesh Karthik Ishan Kishan

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி பெற்ற வெற்றி தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்ததால் இந்த தொடரானது மிகவும் சுவாரசியமாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது. பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கை துரத்திய அயர்லாந்து அணியானது 221 ரன்கள் வரை பந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Sanju Samson

அயர்லாந்து அணியின் இந்த போராட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா அயர்லாந்து மைதானத்தில் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு குறித்தும் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்களின் பெயரை உச்சரித்து ஆதரவு தெரிவித்தனர். சஞ்சு சாம்சன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை வியக்க வைத்தது. இங்குள்ள ரசிகர்களை நாங்கள் எங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் மகிழ்வித்ததாக நினைக்கிறன்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயமாக இவர் விரைவில் இடம் பிடிப்பார் – கிரேம் ஸ்வான் ஓபன்டாக்

இந்திய அணிக்கு கேப்டனாக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருடைய கனவாக இருக்கும். அந்த வகையில் எனது கனவு நிறைவேறியதும், இந்திய அணிக்காக கேப்டனாக நான் இந்த வெற்றிகளை பெற்றுத்தந்ததும் மகிழ்ச்சியாக உள்ளது என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement