CSK : மேட்சுக்கு முன்னாடியே தோனி இதுதான் நடக்கும்னு என்கிட்ட சொல்லிட்டாருங்க – தீபக் சாஹர் பகிர்ந்த சுவாரசியம்

Deepak-Chahar-1
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

CSK 2023

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவிக்க பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று புள்ளிபட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 3 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Deepak Chahar

அதுவும் போட்டியின் முதல் ஓவரிலும், மூன்றாவது ஓவரிலும் தீபக் சாஹர் விக்கெட்டை கைப்பற்றியதால் அது சென்னை அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய தீபக் சாஹர் கூறுகையில் : இந்த மைதானம் ஸ்லோவாகவும், ஸ்விங் செய்யும் விதமாகவும் இருந்தது.

- Advertisement -

போட்டிக்கு முன்னரே தோனி என்னிடம் வந்து பேசினார். அப்போது தோனி கூறுகையில் : மைதானம் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது. எனவே இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்யும் அணிக்கு மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டமாகவே இருக்கும். எனவே நீ வேகமாக பந்து வீசாதே முடிந்த அளவு பொறுமையாக பந்துவீசி ஸ்விங் செய்யப்பார். அப்படி நீ பந்து வீசினால் அவர்கள் பவுண்டரிகள் அடிப்பது கடினம். அதோடு உனக்கு விக்கெட்டும் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : CSK vs DC : நான் வந்தாலே சி.எஸ்.கே பேன்ஸ் வெயிட் பண்ணினு இருக்காங்க. எதுக்கு தெரியுமா? – ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

அந்த வகையில் தோனி பாய் கூறியது போலவே இரண்டாவது இன்னிங்ஸின்போது பனிப்பொழிவும் இல்லாமல் மைதானம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. அதனால் நான் பந்தை ஸ்விங் செய்து வீசவே முயற்சித்தேன். அப்படி வீசுகையில் விக்கெட்டும் கிடைத்தது. இந்த வெற்றியில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி என தீபக் சாஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement