CSK vs DC : நான் வந்தாலே சி.எஸ்.கே பேன்ஸ் வெயிட் பண்ணினு இருக்காங்க. எதுக்கு தெரியுமா? – ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் தேர்வு செய்தது.

CSK 2023

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே குவித்ததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை அணி பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஜடேஜா திகழ்ந்தார். ஏனெனில் பேட்டிங்கின் போது 16 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 20 ரன்களையும், பந்துவீச்சில் நான்கு ஓவர்களை முழுவதுமாக வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் இருந்து வழங்கப்பட்டது.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்த மைதானத்தில் பந்து நின்று திரும்பியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அதோடு நாங்கள் இங்கே பயிற்சி மேற்கொண்டு வருவதால் எங்களுக்கு இங்குள்ள லைன் மற்றும் லென்த் நன்றாக தெரியும்.

- Advertisement -

ஆனால் வெளியில் இருந்து வரும் அணி வீரர்களுக்கு மைதானம் சாதகமாக கொஞ்சம் நேரம் பிடிக்கும். இதுதான் சொந்த மைதானத்தில் எங்களுக்கு கிடைக்கும் கூடுதல் சாதகம் என்று ஜடேஜா கூறினார். மேலும் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய அவர் : நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய முன்கூட்டியே வருகிறேனோ அப்போதெல்லாம் ரசிகர்கள் தோனி தோனி என்று கத்துகின்றனர்.

இதையும் படிங்க : IPL 2023 : ஒரு காலத்துல சிறுத்தை மாதிரி ஓடிய என் நண்பன் இப்போ நொண்டுவதை பார்ப்பது கஷ்டமா இருக்கு – இர்பான் பதான் வேதனை

மேலும் நான் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்தால் நான் ஆட்டமிழந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் காத்திருக்கின்றனர். அப்போதுதான் தோனி இறங்குவார் என்பதனாலேயே அவர்கள் அப்படி நினைக்கிறார்கள் இருந்தாலும் அணி வெற்றி பெற்றால் நல்லது தான் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement