IND vs ZIM : உண்மையா சொல்லனுனா எனக்கு அந்த பதட்டம் இருந்துச்சி தான் – ஆட்டநாயகன் தீபக் சாஹர் பேட்டி

Deepak-Chahar
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்திய அணியானது 189 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணியை சுருட்டியது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய வீரர்கள் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் குவித்து இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Shubman Gill

- Advertisement -

துவக்க வீரர் ஷிகார் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் குவித்து அசத்தினர். இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்தனர். ஏனெனில் முதலில் பந்துவீசும் போதே பவர்பிளே ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

அதுமட்டுமின்றி ஜிம்பாப்வே வீரர்களை பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் அடுத்தடுத்து விட்டுக்களை எடுத்து ஜிம்பாப்வே அணியை அழுத்தத்திற்கு தள்ளினர். இந்த போட்டியில் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

Deepak Chahar 1

அதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 41 ஓவருக்குள்ளேயே 189 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசிய தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பயதில் மகிழ்ச்சி. ஒரு வீரராக அணிக்கு திரும்பும் போது விக்கெட்டுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

ஏனெனில் நான் ஆறு மாதங்களுக்கு மேல் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் தற்போது மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுக்க நினைத்தேன். அந்த வகையில் இந்த தொடருக்கு முன்னதாக நான் சில பயிற்சி போட்டிகளில் பங்கேற்று பந்துவீசி இருந்தேன். அதில் என்னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது. இந்த போட்டியிலும் என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs ZIM : முதல் 4-5 ஓவர்லயே முடிஞ்சி போச்சி. தோல்வி குறித்து வருத்தத்துடன் பேசிய – ஜிம்பாப்வே கேப்டன்

ஆனாலும் ஐந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று இருப்பதால் ஆரம்பத்தில் எனக்கு பதட்டம் இருந்தது. தற்போது இந்த முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி முடித்த பிறகு சற்று இலகுவாக உணர்கிறேன். அதோடு எனது உடல் நிலையும் சீராக இருக்கிறது என தீபக் சாஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement