IND vs ZIM : முதல் 4-5 ஓவர்லயே முடிஞ்சி போச்சி. தோல்வி குறித்து வருத்தத்துடன் பேசிய – ஜிம்பாப்வே கேப்டன்

Shikhar-Dhawan
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

KL-Rahul

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி மிகச் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியானது 189 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணியை ஆல் அவுட் ஆக்கியது.

இந்திய அணி சார்பாக தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

Siraj

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற தோல்வி குறித்து பேசியிருந்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சக்கபவா கூறுகையில் : இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே எங்கள் மீது அழுத்தத்தை அளித்தனர். முதல் நான்கு – ஐந்து ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் அந்த இடத்திலேயே எங்களது தடுமாற்றம் ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

பின் வரிசையில் வந்த வீரர்கள் ஓரளவுக்கு சுதாரித்து விளையாடினாலும், எங்களால் ஒன்று இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. அதனாலேயே இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இருந்த போதும் இந்திய அணிக்கு எதிராக எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக போராடினார்கள்.

இதையும் படிங்க : IND vs ZIM : முதல் போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு முழுகாரணமும் இவர்கள் மட்டும் தான் – கே.எல் ராகுல் பாராட்டு

ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அற்புதமாக விளையாடி எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டனர். நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்புவோம் என ஜிம்பாப்வே கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement