IND vs ZIM : முதல் போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு முழுகாரணமும் இவர்கள் மட்டும் தான் – கே.எல் ராகுல் பாராட்டு

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று ஹராரே நகரில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணியானது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே அணியை 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருட்டி அசத்தினர்.

Siraj

இந்திய அணி சார்பாக தீபக் சாஹர், அக்ஷர் பட்டேல், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 192 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய தீபக் சாஹருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. துவக்க வீரர்களான ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Deepak Chahar 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : நிறைய கிரிக்கெட் விளையாடும் போது நிறைய காயங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் காயம் காரணமாக வெளியில் அமர்ந்து இருந்தது மிகவும் கடினமான காலமாக இருந்தது. இருந்தாலும் தற்போது மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளதாக உணர்கிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். போட்டியின் துவக்கத்திலேயே சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்தினை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கள் தான் காரணம்.

இதையும் படிங்க : தோனி மட்டும் அந்த வேலைய சரியாக செய்யாம போயிருந்தால் இந்திய கிரிக்கெட் ஆடிப்போயிருக்கும் – கங்குலி பாராட்டு

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அணியாக நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அவசியம். அந்த வகையில் தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான நிலையில் உள்ளது என ராகுல் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement