தோனி மட்டும் அந்த வேலைய சரியாக செய்யாம போயிருந்தால் இந்திய கிரிக்கெட் ஆடிப்போயிருக்கும் – கங்குலி பாராட்டு

Ganguly
- Advertisement -

இந்திய நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி கடந்த 2004இல் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியின் ஆதரவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி நிரந்தர விக்கெட் கீப்பராக இடம் பிடிக்கும் அளவுக்கு பேட்டிங்கில் அதிரடியாகவும் விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்திலும் செயல்பட்டு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாகவும் பேட்டிங் செய்து வெற்றிக்கு பங்காற்ற முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்துக் காட்டிய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றியமைத்தார்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

அதேபோல் 2007இல் வங்கதேசத்திடம் படுதோல்வியைடைந்து மிகப்பெரிய காயத்தை சந்தித்த இந்தியாவுக்கு கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் அனைத்து வீரர்களையும் அபாரமாக வழிநடத்தி இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று மருந்து போட்டார். அதேபோல் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், சச்சின் போன்றவர்களை கச்சிதமாக வழிநடத்தி 2010இல் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்திய அவர் 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய தரமான வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.

வளமான வருங்காலம்:
திறமையான விக்கெட் கீப்பர், கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் பினிஷர் ஆகிய பரிணாமங்களை விட கேப்டன் என்ற பரிணாமமே தோனிக்கு பொருத்தமாக அமைந்தது. அதனாலேயே அவரை கண்டெடுத்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி “தோனி பார்ன் டு லீட் அதாவது கேப்டனாக பிறந்தவர்” என்று பாராட்டியிருந்தார். இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் எனில் 2007 மற்றும் 2011 ஆகிய உலக கோப்பைகளை கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து வென்ற தோனி 2013இல் இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை வைத்து சாம்பியன் பட்டம் வென்று தன்னை மிகச் சிறந்த கேப்டன் மற்றும் தலைவர் என்று நிரூபித்துக் காட்டினார்.

Shikhar Dhawan Rohit Sharma MS Dhoni

இங்கு தான் இந்திய கிரிக்கெட்டை அவர் வளமாக கட்டமைத்ததில் மிகப் பெரிய பங்காற்றினார். ஆம் 2011 உலக கோப்பைக்கு பின் சச்சின், சேவாக், கம்பீர், ஹர்பஜன் என பெரும்பாலான வீரர்கள் மூத்த வயதை எட்டியதால் இந்தியாவின் நலனை கருதி அடுத்த தலைமுறைக்கு தரமான வீரர்களை உருவாக்க நினைத்த அவர் அதற்காக மேற்குறிப்பிட்ட நிறைய சீனியர் வீரர்களுக்கு பதிலாக விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்தார். அதனால் ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்ட அவரை சேவாக், கம்பீர் போன்ற தங்களது ஹீரோக்களின் கிரிக்கெட் கேரியரை முடித்தவர் என்று அவர்களது ரசிகர்கள் இப்போதும் சித்தரிக்கிறார்கள்.

- Advertisement -

வாருங்காலம் ஆடிப்போயிருக்கும்:
ஒருவேளை அந்த காலகட்டத்தில் அவர் மட்டும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சீனியர்களை ஆதரித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இன்று இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் இந்தியாவும் கத்துக்குட்டியாக மாறியிருக்கும் என்பதே நிதர்சனம். தற்போதைய இந்திய அணியில் விராட் கோலி முதல் பாண்டியா வரை விளையாடும் 70% வீரர்கள் அவரால் வாய்ப்பு அளிக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தவர்கள் என்பதே அதற்கு சான்றாகும்.

Kohli

அதேபோல் கேப்டனாகவும் 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் காயத்தால் விலகிய தமக்கு பதிலாக பொறுப்பேற்ற விராட் கோலி கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து சென்றார். அதனால் தமக்குப் பின் விராட் கோலி தகுதியானவர் என்று உணர்ந்த அவர் உடனடியாக டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து தனது கேரியரை விரிவுபடுத்த மொத்தமாக ஓய்வு பெற்றார். மேலும் வெள்ளைப் பந்து கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 2019 உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதற்காக 2017இல் அந்த பதவியையும் விராட் கோலியிடம் ஒப்படைத்து அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார்.

- Advertisement -

மொத்தத்தில் உலகக்கோப்பையை வென்ற தோனி ஒரு கேப்டனாக இந்தியாவின் வருங்காலத்தையும் தரமாகவே அமைத்துவிட்டு சென்றுள்ளார். அதனால் தான் அவருக்குப் பின்பும் விராட் கோலி தற்போது ரோகித் சர்மா ஆகியோரது தலைமையில் இந்தியா வெற்றிநடை போடுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சரியான பாதையில் தோனி கட்டமைத்ததாக பாராட்டும் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்த தலைமுறை கேப்டன்களும் அதை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Ganguly 1

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா எப்போதுமே சற்று பின்தங்கி அனைத்து முடிவுகளையும் பொறுமையாகவும் நிதானமாகவும் எடுப்பவராக உள்ளார். வரலாற்றில் இந்தியா சில மிகச் சிறந்த கேப்டன்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை மாற்றத்தை எம்எஸ் தோனி மிகச்சரியாக செய்துள்ளார். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் தனது டி20 அணிக்கும் அதை அவர் (சென்னை) சிறப்பாக செய்து வருகிறார்”

“அவருக்குப் பின் வந்த விராட் கோலியும் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார். வித்தியாசமான கேப்டனான அவர் வித்தியாசமான அம்சங்களை செய்தார். அந்த வகையில் ஒவ்வொரு கேப்டன்களும் வித்தியாசமானவர்கள். ஆனால் முடிவில் இந்தியாவுக்காக நீங்கள் எப்படி வெற்றி தோல்வியை பெறுகிறீர்கள் என்பதே முக்கியம். அதனால் எந்த கேப்டனையும் நான் ஒப்பிடுவது கிடையாது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனி ஸ்டைல் வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement