- Advertisement -
ஐ.பி.எல்

தோனி தான் நம்பர் 1 கேப்டன் ஏன் தெரியுமா? – தோனியுடனான உறவு குறித்து பேசிய – தீபக் சாகர்

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். துவக்க ஓவர்களிலேயே அற்புதமான ஸ்விங் பந்துவீச்சினை வெளிப்படுத்தும் இவர் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவராக இருந்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகிய தீபக் சாகர் அந்த ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரராக இதுவரை திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை அணியில் தான் விளையாடும் போது தோனி தனக்கு அளித்த ஆதரவு குறித்து பேசியுள்ள தீபக் சாகர் கூறுகையில் : தோனி எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அவர் சொன்னதிலேயே சிறந்த அட்வைஸ் என்னவெனில் : முதலில் நீ விளையாடும்போது உன்னை நம்பு. அப்போதுதான் உன்னிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அவர் கூறியபடி என் மீது நம்பிக்கை வைத்து நான் விளையாடிய போது அது என்னுடைய ஆட்டத்தில் பிரதிபலித்தது. வீரர்களை அவர்களது இஷ்டத்திற்கு சுதந்திரமாக விட்டு அவர்களுக்குள் என்ன திறன் இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்பவர் தோனி.

ஒரு வீரரின் திறனை புரிந்துகொண்டு அவர்களிடம் இருந்து அவர்களின் பெஸ்ட்டை பெறுவார். இதனாலேயே அவரை நான் நம்பர் ஒன் கேப்டன் என்பேன். ஒருமுறை தோனி உங்கள் மீது நம்பிக்கை வைத்து விட்டால் நிச்சயம் உங்களிடம் நல்ல திறன் இருக்கிறது என்று அர்த்தம். அதன் பிறகு நம்மை நாம் நம்பினாலே போதும். நிச்சயம் அது நமக்கு சாதகமாய் அமையும்.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக நான் ஆரம்பத்தில் விளையாடும் போது தோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார். அதோடு அவர் கொடுத்த ஆலோசனைகளின் படி செயல்படவே தற்போது என்னுடைய கிரிக்கெட் கரியரே மாறி நான் மிகச் சிறப்பான வீரராக மாறி உள்ளேன் என்று தீபத் சாகர் கூறினார்.

இதையும் படிங்க : சுமாரான ரெகார்ட் வெச்சுருக்காரு,ஆசிய கோப்பை இந்திய அணிக்குள் அஷ்வின் எப்படி வந்தார்னே தெரியல – முன்னாள் வீரர் கேள்வி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது ஆல் ரவுண்டாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதிலும் குறிப்பாக பேட்டிங் ஆல் ரவுண்டாக விளையாடுவது என்னுடைய விருப்பம். ஆனால் நாளடைவில் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக முடிவெடுத்தேன் என தீபக்சாகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by