சுமாரான ரெகார்ட் வெச்சுருக்காரு,ஆசிய கோப்பை இந்திய அணிக்குள் அஷ்வின் எப்படி வந்தார்னே தெரியல – முன்னாள் வீரர் கேள்வி

ashwin-2
- Advertisement -

ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 15ஆவது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த 15 பேர் கொண்ட அணிக்கு கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் பார்மின்றி தவிக்கும் விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Ravichandran Ashwin

- Advertisement -

இந்த அணியில் முகமது சமி, அக்சர் படேல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது நிறைய முன்னாள் வீரர்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. அதேசமயம் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்ற கருத்துக்களும் வெளிவருகின்றன. அதேபோல் இந்த அணியில் தமிழகத்தின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் 2017க்குப்பின் வெள்ளைப் அந்த அணியில் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட அவரின் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் 4 வருடங்கள் கழித்து கடந்த 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

அஷ்வின் இடம்:
அதில் முழுமையாக வாய்ப்பு பெறாத நிலையில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் அதன்பின் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் வாய்ப்பு பெற்று சிறப்பாகவே செயல்பட்டார். அதன்பின் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக வழக்கம்போல சுழல் பந்து வீச்சிலும் பேட்டிங்கில் முதல் முறையாக அரைசதம் அடித்து ஆல்-ரவுண்டராக அசத்தினார். ஆனாலும் அதன்பின் நடந்த தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவரைக் கண்டு கொள்ளாத தேர்வுக்குழு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்தது.

ashwin

அந்த தொடரில் 3 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 3 விக்கெட்டுகளை 6.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் முதல் சுழல் பந்து வீச்சாளராக சஹாலும் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருக்கும் போது தொடர்ச்சியாக விளையாடாத அஷ்வின் எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

- Advertisement -

சுமாரான ரெகார்ட்:
குறிப்பாக தமிழகத்தின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அஷ்வின் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வரிசையில் இணைந்துள்ள மற்றொரு முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் அஷ்வினின் ஐபிஎல் புள்ளி விவரங்கள் சுமாராக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் ஆசிய கோப்பையில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் அஷ்வின் இந்திய அணிக்குள் எப்படி வருகிறார் என்பதை பார்த்து நானும் ஆச்சரியப்படுகிறேன். கடந்த உலகக் கோப்பையிலும் தேர்வு செய்யப்பட்ட அவர் அதன்பின் விளையாடவில்லை. அவரின் ஐபிஎல் புள்ளி விவரங்களைப் பாருங்கள், அது நன்றாக இல்லை”

“எனவே சிறப்பாக செயல்பட்ட ஷமி மற்றும் அக்சர் படேலை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்ட அந்த இருவரும் உலக கோப்பையில் விளையாட வேண்டும். ஏனெனில் எனக்கு விக்கெட் எடுக்கும் பவுலர்கள் தான் தேவை. அந்த வகையில் ஷமி போட்டியின் அனைத்து இடங்களிலும் விக்கெட் எடுக்கும் திறமை பெற்றவர். மேலும் அஷ்வின் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது எனக்கு முற்றிலும் புரியவில்லை”

“எதற்காக அவர் தேர்வு செய்யப்பட்டார்? எதற்காக அவர் நீக்கப்பட்டார்? எதற்காக இங்கிலாந்து தொடரில் விளையாடாமல் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்டார் என்ற அனைத்தும் குழப்பமாக உள்ளது. ஏனெனில் உங்களிடம் முதலாவதாக ஜடேஜா இரண்டாவதாக சஹால் அல்லது அக்சர் படேல் ஆகியோருடன் ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்” என்று கூறினார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் 12 விக்கெட்டுகளை 7.51 என்ற எக்கனாமியில் எடுத்ததுடன் பேட்டிங்கில் 191 ரன்களை 141.48 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement