CSK vs DC : டெல்லி அணிக்கு எதிரா பேட்ஸ்மேன்கள் எங்க வேலையை ஈஸி ஆக்கிட்டாங்க – தீபக் சாஹர் பேட்டி

Deepak-Chahar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 77 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

CSK vs DC

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது.

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே குவித்ததால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Deepak Chahar 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய தீபக் சாஹர் கூறுகையில் : இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது. எனவே இந்த வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது. இந்த போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்யும்போது 160 ரன்கள் வரை அடித்தால் போதும் என்று நினைக்கையில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 220 ரன்களை குவித்தனர். 220 ரன்கள் என்பது இந்த வெற்றிக்கு போதுமான ஒன்று அந்த இடத்திலேயே பேட்ஸ்மேன்கள் எங்களது வேலையை சுலபமாக்கினார்.

இதையும் படிங்க : IPL 2023 : அணி நிர்வாகத்தை குறை சொல்லாதீங்க, நீங்க சண்டை போடாம இப்டி நடக்குமா? இளம் இந்திய வீரரை விளாசிய சேவாக்

மேலும் மைதானமும் எங்களுக்கு சற்று கை கொடுத்ததால் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. துஷார் தேஷ்பாண்டே மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதோடு பதிரானாவும் கடைசி கட்ட ஓவர்களை அற்புதமாக வீசி வருகிறார் என தீபக் சாஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement