IPL 2023 : காதலுக்கும் சரி கேரியர் முடிஞ்சுன்னு நெனச்சப்பவும் சரி, அவர் தான் ஹெல்ப் பண்ணாரு – தீபக் சஹர் ஓப்பன்டாக்

Deepak-Chahar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் ஆகிய அணிகள் மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அப்போட்டியில் 5வது கோப்பையை வென்று விரைவில் 42 வயதை தொடும் கேப்டன் எம்எஸ் தோனியை வெற்றியுடன் சென்னை அணியினர் வழி அனுப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை கேப்டனாக சென்ற தோனி நிறைய இளம் வீரர்கள் வளர்வதில் இப்போது முக்கிய பங்காற்றி வருகிறார்.

அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் 2011 முதலே ஐபிஎல் தொடரில் பெஞ்சில் இருந்த நிலையில் 2017இல் புனேவுக்காக விளையாடிய போது முதல் முறையாக தோனியின் அறிமுகத்தை பெற்றார். அங்கே அவருடைய திறமையை உணர்ந்த தோனி 2018இல் மீண்டும் சென்னை விளையாட துவங்கிய போது தேர்வு செய்து முதன்மை பவுலராக வாய்ப்பு கொடுத்தார். அதில் 10 விக்கெட்டுகளை எடுத்து சென்னை 3வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2019 சீசனில் 22 விக்கெட்களை எடுத்து ஃபைனல் வரை செல்வதற்கு உதவினார்.

- Advertisement -

தோனியின் உதவி:
மேலும் பவர் பிளே ஸ்பெலிஸ்ட் பவுலராக உருவெடுத்த அவர் இந்தியாவுக்காகவும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராகவும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தவராகவும் சாதனை படைத்தார். இருப்பினும் கடந்த சீசனில் காயத்தால் வெளியேறியது சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் இந்த சீசனில் 9 போட்டிகளில் 13* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் மீண்டும் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

முன்னதாக 2018 சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சுமாராக பந்து வீசியதால் தோனி திட்டியதையும் அதற்கடுத்த ஓவரிலேயே தீபக் சஹர் அபாரமாக பந்து வீசியதையும் யாராலும் மறக்க முடியாது. அதிலிருந்தே நல்ல பவுலரான மாறிய அவர் அந்த சமயத்தில் தோனி என்ன சொன்னார் என்பதையும் கேரியர் முடிந்ததாக பயந்த சமயத்தில் உதவியதையும் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த சீசனில் ஒரு போட்டியில் சர்பராஸ் கான் களத்தில் இருந்த போது முதல் முறையாக எனது கேரியரில் நான் டெத் ஓவரில் பவுலிங் செய்தேன். அதற்கு முன் அந்த இடத்தில் பந்து வீசுவதற்கான தேவையில்லாததால் அவர்கள் என்னை பயன்படுத்தவில்லை”

- Advertisement -

“குறிப்பாக ஷார்துல், ப்ராவோ ஆகியோர் தான் பொதுவாக டெத் ஓவர்களில் பந்து வீசுவார்கள். இருப்பினும் பிராவோ காயத்தை சந்தித்த அந்த முக்கியமான போட்டியில் கடைசி 3 ஓவரில் எதிரணிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மெதுவாக வீச நினைத்த என்னுடைய மணிக்கட்டு திரும்பியதால் அது ஃபுல் டாஸ் பந்தாக மாறியது. அப்போது ஏதோ சில சிக்கலால் அந்த தவறு நடந்ததாக நினைத்த நான் மீண்டும் சரியாக வீசலாம் என்று அதே மாதிரியான பந்தை வீசினேன். ஆனால் மீண்டும் அது ஃபுல் டாஸாக மாறியது”

“அப்படி அடுத்தடுத்த பீமர் பந்துகளை வீசியதால் தோனி வாய்ப்பு தர மாட்டார் என்று நினைத்த நான் டெத் ஓவர்களில் பந்து வீசும் என்னுடைய கேரியர் முடிந்ததாக நினைத்தேன். குறிப்பாக அப்போது என்னுடைய அருகே வந்த தோனி “உனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் நடி. ஆனால் ஏன் இப்படி பந்து வீசுகிறாய்” என்று கோபத்துடன் சொன்னதால் கேரியர் முடிந்ததாக நினைத்தேன். இருப்பினும் அடுத்த 5 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே கொடுத்ததால் கடைசியில் வென்ற பின் இறுதியில் அவர் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : ஃபைனலில் 2 இன்னிங்ஸிலும் சதமடிச்சு ஜெயிங்க – நட்சத்திர வீரருக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்து சொன்ன சயீத் அன்வர்

அதே போல் 2021 ஐபிஎல் தொடரில் தமது காதலிக்கு ப்ரபோஸ் செய்ததிலும் சென்னை அணியின் நலனை கருதி தோனி கொடுத்து ஆலோசனையை பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “அந்த சீசனில் ஃபைனலுக்கு பின் நான் ப்ரபோஸ் செய்யலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதை குவாலிபயர் போட்டிக்கு முன்பாகவே செய்யுமாறு தோனி என்னிடம் கூறினார். ஏனெனில் அப்போது தான் நான் ஃபைனலில் கவனத்துடன் விளையாடிவேன் என்று அவர் கருத்தினார்” என கூறினார்.

Advertisement