- Advertisement -
ஐ.பி.எல்

அதுக்கு மஹி பாய் தான் காரணம்.. 13 கோடி வெச்சுகிட்டு சிஎஸ்கே போராடியதே பெருசு.. சஹர் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த வாரம் முடிவுற்றது. அந்த ஏலத்தில் பல வீரர்கள் பல்வேறு அணிகளில் இருந்து வேறு அணிகளுக்காக விளையாட வாங்கப்பட்டனர். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக 2018 முதல் விளையாடி வந்த தீபக் சஹர் அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட 9.25 கோடிகளுக்காக வாங்கப்பட்டார்.

வேகப்பந்து வீச்சாளரான அவர் 2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் சிஎஸ்கே தோனி தலைமையில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஒரு வருடம் 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அவர் காயத்தால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அப்படி அடிக்கடி காயத்தை சந்திப்பதால் இம்முறை சிஎஸ்கே அவரை விடுவித்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

போட்டியிட்ட சென்னை:

ஆனாலும் அவரை ஏலத்தில் வாங்குவதற்கு சென்னை அணி முடிந்தளவுக்கு போட்டி போட்டது. இருப்பினும் போதுமான தொகை இல்லாததால் கடைசியில் அவரை மும்பை அணி வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்தளவுக்குத் தாம் வளர்வதற்கு எம்எஸ் தோனி முக்கிய பங்காற்றியதாக தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஏலத்தில் வெறும் 13 கோடிகள் இருந்த போது தம்மை வாங்குவதற்கு சென்னை 9 கோடிகள் வரை கேட்டு கடுமையாக போராடியதாக சஹர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் எனக்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்தார். அதனாலேயே நான் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாட விரும்பினேன். ஆனால் என்னுடைய பெயர் ஏலத்தில் இரண்டாவது நாள் தான் வந்தது”

- Advertisement -

சஹர் நெகிழ்ச்சி:

“அதனால் சென்னை அணிக்காக மீண்டும் நான் விளையாடுவது கடினமாக இருக்கும் என்ற ஐடியா எனக்கு கிடைத்தது. இரண்டாவது நாளிலும் அவர்கள் 13 கோடி மட்டும் கையிருப்பு தொகை வைத்திருந்த போது என்னை வாங்குவதற்கு 9 கோடிகள் வரை சென்று போட்டியிட்டார்கள். கடந்த வருடம் என்னுடைய பெயர் ஏலத்தில் ஆரம்பத்திலேயே வந்தது. அதனால் சென்னை என்னை எளிதாக மீண்டும் வாங்கினார்கள்” என்று கூறினார்

இதையும் படிங்க: 12.4 ஓவரில் 104 ரன்ஸ்.. சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை.. நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து

அந்த வகையில் இம்முறையும் தம்முடைய பெயர் ஆரம்பத்திலேயே முதல் நாளில் வந்திருந்தால் சென்னை வாங்கியிருப்பார்கள் என்று சஹர் தெரிவித்துள்ளார். ஆனால் இரண்டாவது நாளில் வந்ததால் சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பு இழந்ததாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை அடுத்து 5 கோப்பைகளை வென்ற மற்றொரு வெற்றிகரமான மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -