நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது.
அதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93, கிளன் பிலிப்ஸ் 58*, கேப்டன் டாம் லாதம் 47 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து அசத்தியது.
இங்கிலாந்து அசத்தல்:
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் சதமடித்து 171, ஓலி போப் 77, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 4, நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்தை சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து 254 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து மீண்டும் அசத்தியது.
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 61, டேரில் மிட்சேல் 84 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 104 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 1, பென் டக்கெட் 27 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் ஜேக்கப் பெத்தல் அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 50* (37) ரன்கள் விளாசினார்.
ரூட் சாதனை:
அவருடன் ஜோ ரூட் 23* (15) ரன்கள் எடுத்ததால் 12.4 ஓவரிலேயே 104-2 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் சமீபத்தில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் இத்தொடரில் முதல் போட்டியிலேயே தோற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜீனியஸ் ஒரே நாள்ல பிறப்பதில்லை.. விராட் கோலி பற்றி விமர்சித்தவர்களுக்கு அஜய் ஜடேஜா பதிலடி
முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த 23 ரன்களையும் சேர்த்து தனது கேரியரில் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் 1630 ரன்களை குவித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட்: 1630
2. சச்சின் டெண்டுல்கர்: 1625
3. அலெஸ்டர் குக்/கிரேம் ஸ்மித்: தலா 1611