ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள். அதே போல பந்து வீச்சில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நடந்த 5 வருடங்களில் 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்தார். அந்த வகையில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட அவர் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தார். அதன் காரணமாக அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய விமர்சனங்கள் காணப்பட்டன.
ஜடேஜா பதிலடி:
ஆனால் அவர்களுக்கு முதல் போட்டியிலேயே சதமடித்த விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து தம்முடைய தரத்தை நிரூபித்தார். இந்நிலையில் விராட் கோலியின் தரத்தை சந்தேகப்பட்டவர்கள் முதல் போட்டியில் அடித்த சதத்தை பார்த்து விட்டு ரெஸ்ட் இன் ஃபீஸாக வேண்டுமென முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சந்தேகப்பட்டவர்கள் அமைதியாகலாம். அதுவே அனைத்தையும் சொல்லும். ஒருவேளை அவரை சந்தேகப்படுபவர்கள் யாராக இருந்தால் அவர்கள் அமைதியாக போகலாம். ஏனெனில் ஜீனியஸ்கள் ஒரே நாள் இரவில் பிறப்பதில்லை” என்று கூறினார். அதே போல பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் பற்றி அவர் பதிலளித்தது பின்வருமாறு.
கம்பீர் கோச்சிங்:
“நீங்கள் அவர் மீது நியாயமாக இல்லை என்று நினைக்கிறேன். பயிற்சியாளர் உட்பட எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் இவ்வளவு குறைவான காலத்தில் ஒருவருடைய செயலை மதிப்பிட முடியாது. சில நேரங்களில் நீங்கள் வெல்வீர்கள் சில நேரங்களில் தோற்பீர்கள். எனவே கம்பீரை நான் வெறும் 6 மாதங்கள் வைத்து மதிப்பிட மாட்டேன். தற்போது அவருடைய தலைமையிலான செயல்பாடுகளை நீங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. அர்ஷ்தீப் சிங் விவகாரத்தில் பஞ்சாப் செய்த தவறு – ஆகாஷ் சோப்ரா
“அவர் மிகவும் தெளிவான நபர். அதை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காண்பித்து வருகிறார். ரோஹித் சர்மா மீண்டும் வந்துள்ளது இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேடு பள்ளங்களில் அவர் இந்திய அணியுடன் இருக்கக்கூடியவர். தற்போது இந்திய அணி மேலே வரும் போது அவர் மீண்டும் நன்றாக வழி நடத்துவார்” என்று கூறினார்.