இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. அர்ஷ்தீப் சிங் விவகாரத்தில் பஞ்சாப் செய்த தவறு – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிலருக்கு பெரிய தொகை சம்பளமாக கிடைத்தது. அந்த வகையில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் வாங்கப்பட்ட வேளையில் பந்துவீச்சாளர்களில் அதிக தொகைக்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோர் 18 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டனர்.

அதிக தொகைக்கு வாங்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் :

இந்த ஏலத்தில் அதிக தொகையை வைத்துக்கொண்டு பங்கேற்ற பஞ்சாப் அணியானது ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், சாஹல் ஆகிய மூவரையும் வாங்குவதற்காகவே பாதி தொகையை செலவு செய்துவிட்டது. பின்னர் மீதம் இருந்த தொகைகளில் மிகச் சிறப்பான வீரர்களை அவர்கள் வாங்கி இருந்தாலும் இந்த செலவுகளை நிச்சயம் அவர்களால் முன்கூட்டியே குறைத்து சரியான திட்டமிடலுடன் செயல்பட்டிருக்க முடியும் என்று சில விமர்சனங்களும் அந்த அணியின் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் அணி செய்த தவறு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட வேண்டிய வீரர். எனவே அவருடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி 16 கோடி ரூபாய்க்கு அவரை அந்த அணியில் தக்க வைத்திருக்கலாம். ஏனெனில் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட வீரர்.

நிச்சயம் நிர்வாகம் அவருடன் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டிருந்தால் அவர் அணி நிர்வாகம் சொல்லும் தொகையை ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் அவரை ஏலத்தில் விட்ட பஞ்சாப் அணி மீண்டும் பெரிய தொகையான 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதை தவிர்த்து இருக்கலாம். புதிய பந்து, பழைய பந்து என இரண்டிலுமே அசத்தலாக பந்துவீச கூடிய அவர் சொல்லப்போனால் பும்ராவை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

- Advertisement -

பும்ராவிற்கு அடுத்து மிகச்சிறந்த விக்கெட் டேக்கரான அவர் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மேலும் யுஸ்வேந்திர சாஹலின் மதிப்பு ஏலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு இந்திய ஸ்பின்னரின் தொகை இவ்வளவு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். அவர் ஒரு மிகச்சிறந்த விக்கெட் டேக்கர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரையும் சற்று சில கோடிகள் குறைத்து பஞ்சாப் அணி வாங்கியிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : 23 வயசுலேயே இவ்வளவு பணம் வந்தா வாழ்க்கை இப்படித்தான் போகும்.. ப்ரித்வி ஷாவை வெளுத்த – பிரவீன் ஆம்ரே

ஷ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை அவர் கேப்டன்சி வீரர் என்பதனால் அவருக்கு கிடைத்த தொகை கூடுதலாக இருந்தாலும் நிச்சயம் அவருக்கு கொடுக்கப்பட்டதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இம்முறை பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அவர்களின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கிறப் போகிறது என்பதை பொறுத்துதான் அந்த செயல்பாடுகள் அமையும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement