23 வயசுலேயே இவ்வளவு பணம் வந்தா வாழ்க்கை இப்படித்தான் போகும்.. ப்ரித்வி ஷாவை வெளுத்த – பிரவீன் ஆம்ரே

Pravin-Amre
- Advertisement -

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுற்குட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ப்ரித்வி ஷா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தினார். மிக இளம் வயதிலேயே மிகச்சிறந்த கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஆகியவை அவரிடம் தென்பட்டதால் அவருக்கு வெகு விரைவாகவே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்திருந்தார்.

பணத்தால் வீணான ப்ரித்வி ஷாவின் கரியர் :

இதன் காரணமாக அடுத்த சச்சினாக வலம் வருவார் என்று பேசப்பட்ட ப்ரிதிவி ஷா வெகுவிரைவாகவே தனது கிரிக்கெட் கரியரின் இறக்கத்தை சந்திக்க ஆரம்பித்தார். ஊக்க மருந்து சோதனையில் சிக்கி எட்டு மாதம் தடைபெற்ற அவர் அதன் பிறகு பேட்டிங் ஃபார்ம் சரி இல்லாமல் போனதால் மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார். பின்னர் பிட்னஸில் கவனம் செலுத்தாமல் கூடுதல் எடை அதிகரித்த காரணமாக நிராகரிக்கப்பட்ட அவர் தொடர்ந்து ஒழுக்கமின்மையான செயல்களை செய்து வந்ததால் தற்போது மும்பை ரஞ்சி அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்து வந்த ப்ரித்வி ஷா இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திலும் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போயுள்ளார். இது கிட்டத்தட்ட அவரது கரியரின் முடிவை தீர்மானிக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தை அவரை தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்து டெல்லி அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 23 வயதிலேயே 30-40 கோடி ரூபாயை ப்ரித்வி ஷா சம்பாதித்து விட்டார். இப்படி வெகு விரைவாக பணத்தை சம்பாதித்த அவருக்கு எவ்வாறு அதனை கையாள வேண்டும் என்று தெரியவில்லை. இன்று எவ்வளவு பெரிய பட்டம் படித்தாலும் அந்த பட்டதாரி இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியுமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இளம் வயதிலேயே இவ்வளவு பணம் வந்தது அவருக்கு எதிர்மறையாக மாறியுள்ளது.

- Advertisement -

எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும்? கிரிக்கெட்டுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் அவர் முறைப்படுத்தவில்லை. இன்று கூட ஐபிஎல் தொடரில் அவரால் 30 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியும். ஆனால் தனக்கு கிடைத்த பிரபலம் மற்றும் பணத்தை அவர் சரியாக கையாளாமல் போனதால் தான் இந்த விளைவு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 233 ரன்ஸ்.. யான்சென் அபாரம்.. இலங்கையை வீழ்த்திய.. தெ.ஆ 2வது சாதனை வெற்றியுடன் இந்தியாவுக்கு போட்டி

ஏற்கனவே நான் அவருக்கு வினோத் காம்ப்ளி எப்படிப்பட்ட வீரராக இருந்து எவ்வளவு பெரிய சரிவை சந்தித்தார் என்று கூறி புத்திமதி கொடுத்திருக்கிறேன். ஆனால் எதுவுமே அவர் இதுவரை கேட்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தான் அவரது இந்த நிராகரிப்புக்கு காரணம் என பிரவீன் ஆம்ரே அவரை வெளுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement