IND vs RSA : கிரீஸ் விட்டு வெளிய இருந்தும் தெ.ஆ வீரரை மான்கட் செய்யாத தீபக் சாகர் – என்ன நடந்தது?

Deepak-Chahar Mankad
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணியானது 2 போட்டியையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsRSA Cup

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் ரைலி ரூசே 48 பந்துகளில் 100 ரன்களும், குவின்டன் டி காக் 43 பந்துகளில் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி தோல்வியை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Stubbs

அதன்படி இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் போட்டியின் முக்கியமான ஒரு ஓவரை இறுதிக்கட்டத்தில் வீச ஓடிவந்த போது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் கிரீஸிலிருந்து வெளியே நடந்து சென்றார்.

- Advertisement -

இதனை கவனித்த தீபக் சாஹரும் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு ஸ்டம்ப் அருகில் சென்று மான்கட் செய்யவா என்று அவரை செல்லமாக எச்சரித்தார். கிரீஸிற்கு வெளியே ஸ்டப்ஸ் நின்றும் அவரை தீபக் சாகர் மான்கட் செய்யவில்லை என்று தற்போது சமூக வலைத்தளம் மூலம் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க : சூர்யாவுக்கு இடமில்லை, டி20 உ.கோ’யில் தரமாக செயல்படப் போகும் 5 வீரர்கள் யார் – கில்கிறிஸ்ட் தேர்வு

ஆனாலும் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் பேட்ஸ்மேனை செல்லமாக எச்சரித்து இதுபோன்று செய்யவேண்டாம் என தீபக் சாகர் அவருக்கு ஒரு வார்னிங் கொடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement