CSK : ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் தீபக் சாஹர் விளாயாடுவாரா? மாட்டாரா? – விவரம் இதோ

Deepak-Chahar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் ஞாயிற்றுக்கிழமை மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த சென்னை அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

CSK vs GT

- Advertisement -

வேளையில் அடுத்ததாக சென்னை அணியுடன் அந்த இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுவார்கள் என்பதால் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இந்த முக்கியமான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரர் தீபக் சாகர் இடம் பெறுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Deepak Chahar 1

ஏனெனில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய அவர் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்ட தீபக் சாகர் இந்த ஐபிஎல் தொடரிலும் ஆரம்ப கட்ட போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி மிகச் சிறப்பாக செய்லபட்டு வருகிறார்.

- Advertisement -

இவ்வேளையில் கடைசியாக நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி பந்தில் கேட்ச் பிடிக்க ஓடிய தீபக் சாகர் அந்த கேட்சை பிடித்ததும் காலில் வலியை உணர்ந்தபடி தாங்கி, தாங்கியே பெவிலியனுக்கு நடந்து சென்றார். மேலும் ஏற்கனவே அவருக்கு அடிப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணியில் பதிரானாவை விளையாட வைக்க நாம இதை பண்ணலாமே? – ரசிகை கொடுத்த பலே ஐடியா

இருந்தாலும் இந்த இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் நிச்சயம் அவரது காயம் குறித்த தெளிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement