மறுபடியும் பழைய பஞ்சாங்கமா? ஒரு வருசமா என்ன பண்ணீங்க.. இந்திய அணியை விளாசிய தீப் தாஸ்குப்தா

Deep dasGupta
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நவீன கிரிக்கெட்டின் நாயகர்களாக செயல்பட்டு வரும் அவர்கள் கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்தார்கள்.

அந்த நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு விராட் கோலியை தவிர்த்து ரோகித் சர்மா ராகுல், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

பழைய பஞ்சாங்கம்:
அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்குவதற்காக சமீபத்திய தொடர்களில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் மற்றும் ரோஹித் ஆகியோரிடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் 180 – 160 ரன்கள் மட்டுமே அடிக்கக் கூடிய மைதானங்கள் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளீர்கள்”

- Advertisement -

“இங்கே உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த ஒரு வருடமாக நாம் எந்த சரியான பாதையையும் நோக்கி செல்லவில்லை. ஒருவேளை நீங்கள் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுத்தால் கடந்த ஒரு வருடத்தில் விளையாடிய இளம் வீரர்களுக்கு தற்போது எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடிய அணியும் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய இந்திய அணியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது”

இதையும் படிங்க: வருங்காலமே இல்ல.. விராட் ரோஹித் வந்ததால் அந்த 3 இளம் வீரர்களின் சான்ஸ் முடிஞ்ச்சு.. தீப் தாஸ்குப்தா

“அதில் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் மீண்டும் இருப்பார்கள். ஆனால் மிடில் ஆர்டர் மீண்டும் அதே போலவே இருக்கும். 3வது இடத்தில் விராட் கோலி 4வது இடத்தில் சூரியகுமார் 5வது இடத்தில் பாண்டியா 6வது இடத்தில் சாம்சன் அல்லது ஜித்தேஷ், 7வதாக ஜடேஜா பின்னர் எஞ்சிய வீரர்கள் இருப்பார்கள். எனவே முந்தைய அணிக்கும் தற்போதைய அணிக்கும் மிடில் ஆர்டரிலும் ஃபினிஷிங் செய்யும் இடத்திலும் பெரிய வித்தியாசம் ஏற்படப் போவதில்லை” என்று கூறினார்.

Advertisement