
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரானது வருகிற 19-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சென்னை வந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோத இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா எதிர்வரும் ஆஸ்திரேலியா சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் :
இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி அட்டகாசமாக விளையாடி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கு அடுத்து மிகப்பெரிய தொடரான ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த ஆஸ்திரேலியா தொடரில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய துருவ் ஜுரேல் நிச்சயம் இடம் பிடித்து விளையாட வேண்டும். ஏனெனில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருக்கும் வேளையில் ஏழாவது இடத்தில் இன்னொரு பேட்ஸ்மேனையும் விளையாட வைத்தால் அது இந்திய அணிக்கு நல்லது.
தற்போதயெல்லாம் இந்திய அணியின் பல பேட்ஸ்மேன்கள் பந்துவீச ஆரம்பித்து விட்டார்கள் எனவே ஏழாவது இடத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலை கொண்டு வருவது நிச்சயம் பயனளிக்கும். அதேபோன்று நான்கு முழுநேர பந்துச்சாளர்களுடன் சில பகுதிநேர பங்குவீச்சாளர்களை பயன்படுத்தினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு கைகொடுக்கும்.
இதையும் படிங்க : விராட் கோலி இந்தியராக பிறந்த ஆஸ்திரேலியர்.. இந்த விஷயங்களை நோட் பண்ணா தெரியும்.. ஸ்டீவ் ஸ்மித்
துருவ் ஜுரேல் இங்கிலந்து தொடரில் கடினமான சூழ்நிலையும் அமைதியாக நுட்பத்துடன் விளையாடினார். அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது எந்த சூழ்நிலையிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாட வேண்டும் என தீப்தாஸ் குப்தா பேசியது குறிப்பிடத்தக்கது.