விராட் கோலி இந்தியராக பிறந்த ஆஸ்திரேலியர்.. இந்த விஷயங்களை நோட் பண்ணா தெரியும்.. ஸ்டீவ் ஸ்மித்

- Advertisement -

நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அப்போதிலிருந்து கடந்த 16 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ளார். அந்த வகையில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

முன்னதாக விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமும் அதிரடியான செயல்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்கு பெயர் போனவர். குறிப்பாக எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அசராமல் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதை விராட் கோலி வழக்கமாக வைத்துள்ளார். மேலும் எதிரணி பவுலர்கள் தம்மை வம்பிழுத்தால் அதற்கு பேட்டால் விராட் கோலி பதிலடி கொடுத்து வருந்த வைத்து விடுவார்.

- Advertisement -

இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலியர்:

எடுத்துக்காட்டாக 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மிட்சேல் ஜான்சன் பவுன்சர் போட்டு விராட் கோலியின் தலையை பதம் பார்த்தார். ஆனால் அதற்காக அசராமல் திருப்பி அடித்த விராட் கோலி சதமடித்து மிட்சேல் ஜான்சனுக்கு பேட்டில் முத்தமிட்டு காற்றில் பறக்க விட்டது மறக்க முடியாது. இந்நிலையில் எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பதில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களை போன்ற குணத்தை கொண்டிருப்பதாக அந்நாட்டின் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

எனவே விராட் கோலி இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியர் என்று மறைமுகமாக பாராட்டும் ஸ்டீவ் ஸ்மித் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “எண்ணங்களிலும் செயலிலும் விராட் கோலி ஒரு ஆஸ்திரேலியர் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போட்டியில் இறங்கும் விதம், சவாலில் இறங்கி எதிர்தரப்புக்கு மேல் வர முயற்சிக்கும் விதம் எங்களைப் போலவே உள்ளது”

- Advertisement -

ஆஸ்திரேலியர் விராட் கோலி:

“எனவே இந்திய வீரர்களில் அவர் தான் அதிகமான ஆஸ்திரேலியர்களின் குணத்தை கொண்டுள்ளார் என்று நான் கூறுவேன். எங்களுக்கிடையேயான போட்டி உண்மை கிடையாது. அவரை நான் தோற்கடித்தாக வேண்டும் என்பது போல் கிடையாது. என்னால் முடிந்தளவுக்கு அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறேன்”

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து போட்டியில் இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பிசிசிஐ.. ரசிகர்கள் விளாசல்

“நாங்கள் நன்றாக பழகுகிறோம். அவ்வப்போது செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். விராட் கோலி ஒரு சிறந்த வெளிப்படையான அற்புதமான வீரர். இந்த கோடைகாலத்தில் அவருக்கு எதிராக மீண்டும் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் நவம்பர் மாதம் முதல் 2024 -25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement