ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து போட்டியில் இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பிசிசிஐ.. ரசிகர்கள் விளாசல்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சமீபத்திய வருடங்களில் மிகப்பெரிய எழுச்சி கண்டு வெற்றி பாதையில் நடந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் வலுவான இங்கிலாந்து, பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல் முறையாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தானின் இந்த எழுச்சிக்கு இந்தியா மிகவும் முக்கிய பங்காற்று வருகிறது. ஏனெனில் பாதுகாப்பு காரணங்களால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதில்லை. எனவே ஆப்கானிஸ்தான் தங்களுடைய சொந்த மண் போட்டிகளை இந்தியாவில் விளையாடுவதற்கு பிசிசிஐ சமீபத்திய வருடங்களில் உதவி செய்து வருகிறது.

- Advertisement -

இந்தியாவின் உதவி:

அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அப்போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி கிரேட்டர் நொய்டா நகரில் துவங்கியது. இருப்பினும் செப்டம்பர் எட்டாம் தேதி நொய்டா மைதானத்தை சுற்றிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனால் செப்டம்பர் 9ஆம் தேதி காலை மழை முழுமையாக நின்று விட்டது.

அதனால் போட்டி நேரத்திற்கு துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும் மைதானத்தில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் போட்டி துவங்குவதில் தாமதமானது. போதாக்குறைக்கு நொய்டா மைதானத்தில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான நவீன இயந்திரங்களும் இல்லை.

- Advertisement -

சுமாரான வசதிகள்:

அதனால் அங்குள்ள மைதான பராமரிப்பாளர்கள் துணிகளை பயன்படுத்தி தண்ணீரை பிழிந்து வாலியில் எடுத்து வெளியே ஊற்றினர். அதை விட ஈரமான பகுதிகள் சூரிய வெளிச்சம் பட்டும் நன்றாக காயவில்லை. அதனால் மின்சார காற்றாடிகளை மைதானத்திற்குள் கொண்டு வந்து மைதானத்தை உலர்த்தும் பணிகளை செய்தனர். ஆனால் அத்தனை வேடிக்கையான விஷயங்களை செய்து 2 நாட்களாகியும் மைதானம் காயவில்லை.

அதனால் இதுவரை அப்போட்டி டாஸ் வீசாமலேயே 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் கோபமடையும் இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்தால் மட்டும் போதாது வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐயை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். அத்துடன் பணக்கார வாரியம் என்று மார் தட்டும் பிசிசிஐ நொய்டா மைதானத்தில் மழையை சமாளிக்க போதுமான வசதிகளை செய்து கொடுக்காதது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க: அவருக்கு எதிரா விளையாட இருப்பது எப்போவுமே எனக்கு மகிழ்ச்சி தான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

மொத்தத்தில் கடந்த காலங்களில் இந்தியா விளையாடிய சில போட்டிகள் இதே போல மழையால் பாதிக்கப்பட்ட போது போதுமான வசதிகள் இல்லாததால் பணக்கார வாரியத்திற்கு என்னவாயிற்று? என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். அப்போது காற்றில் பறந்த இந்தியாவின் மானம் இப்போதும் பறந்து கொண்டிருப்பது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement