இந்திய பவுலர்களில் இவர் ஒருவரால் மட்டுமே எங்களை மிரட்ட முடியும் – தெ.ஆ கேப்டன் ஓபன்டாக்

Elgar
- Advertisement -

இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை 7 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. அதில் 6 முறை தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. அதேபோன்று கடைசியாக 2018 ஆம் ஆண்டு நாம் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 2 க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து இருந்தோம். அப்போது தென் ஆப்பிரிக்க அணியில் ஏ.பி டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ், அம்லா, ஸ்டெயின், பிளாண்டர் போன்ற வீரர்கள் இருந்தனர்.

INDvsRSA

- Advertisement -

ஆனால் தற்போது அவர்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்டதால் இந்த டெஸ்ட் தொடரை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அனைவரும் கூறிவருகின்றனர். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் தற்போது இந்தத்தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் தற்போது பும்ரா வேர்ல்டு கிளாஸ் பவுலராக திகழ்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியப் பவுவர்களில் ஒருவரால் சிறப்பாக பந்துவீசி எங்களை மிரட்ட முடியும் எனில் அது பும்ராவால் முடியும். ஏனெனில் அவரது பந்து வீச்சில் அவ்வளவு துல்லியம் நேர்த்தியாக இருக்கிறது. இருப்பினும் அவர் ஒருவரை மட்டுமே போகஸ் செய்து மட்டுமே நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி பவுலிங்கில் யூனிட்டில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Bumrah

தற்போது உள்ள இந்திய அணி கடைசி இரண்டு மூன்று வருடங்களில் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. வெளிநாட்டு மண்ணில் அவர்கள் பெற்ற வெற்றியே அதற்குச் சான்று என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் அனுபவ வீரர் அஷ்வின் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக ஆன்ரிச் நோர்கியா காயம் காரணமாக வெளியேறி உள்ளார். நிச்சயம் தற்போதுள்ள இந்திய அணியின் பலத்தைக் கொண்டு தென்னாபிரிக்க அணியை அவர்களது மண்ணில் வீழ்த்த முடியும் என்பதே அனைவரது ஒருமித்த கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement