INDvsRSA : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் 26ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்கிற காரணத்தினால் இம்முறை கோப்பையை கைப்பற்ற இந்திய அணி கடுமையான போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அப்படி இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த பட்டியலை நாங்கள் உங்களுக்கு இங்கே உத்தேசபட்டியலாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி துவக்க வீரராக ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக புஜாராவும், 4-வது வீரராக விராட் கோலியும் களம் இறங்குவார்கள். அதேபோன்று 5-ஆவது வீரராக ரஹானேவிற்கு பதிலாக நியூசி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயரும், ஆறாவது வீரராக விஹாரியும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் விளையாடுவார்.

Iyer-2

மேலும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டும் விளையாடுவார் என்றும் மீதமுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ தொடரில் நீங்க இப்படித்தான் ஆடனும். கோலி அன்ட் கோவிற்கு அட்வைஸ் கொடுத்த – சச்சின்

1) மாயங்க் அகர்வால், 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) விஹாரி, 7) பண்ட், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) சிராஜ்.

Advertisement