தெ.ஆ தொடரில் நீங்க இப்படித்தான் ஆடனும். கோலி அன்ட் கோவிற்கு அட்வைஸ் கொடுத்த – சச்சின்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியானது எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்திய வீரர்களுக்கு தனது அறிவுரையை வழங்கியுள்ளார்.

IND

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்போதுமே சொல்வது ஒன்றுதான். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பிரெண்ட் ஃபுட் டிஃபன்ஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்று. இன்னிங்சின் ஆரம்பத்தில் பிரெண்ட் ஃபுட் டிஃபன்ஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஆரம்பத்தில் 25 ஓவர்கள் இப்படி ஆடுவதன் மூலம் நாம் விக்கெட் விழுவதை தவிர்க்க முடியும்.

கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சதம் அடிக்க காரணமாக அவர்களது இந்த கால் நகர்வுகளே காரணமாக அமைந்ததை நாம் பார்த்தோம் என டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இப்படி ஆடுவதன் மூலம் நம் உடம்பில் இருந்து கைகள் எளிதாக வெளியில் செல்லாது. அயல் நாட்டு மைதானங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பந்து பிட்ச் ஆகி வெளியே செல்லும் போது நாம் கையை ஃப்ரீ செய்து விளையாடுகிறோம். அப்படி விளையாடுவதன் மூலம் எளிதாக விக்கெட்டுகள் கிடைக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னை நொறுக்கியது. நான் நொந்து போயிட்டேன் – அஷ்வின் ஓபன்டாக்

ஆனால் பிரெண்ட் ஃபுட் டிஃபன்ஸ்ஸை பின்பற்றுவதன் மூலம் நாம் வெளியில் செல்லும் பந்தை அடிக்க நினைக்க மாட்டோம். எனவே நிச்சயம் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இந்திய அணி விளையாடுவது தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாட ஒரு உத்தியாக அமையும் என்று சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement