ரவி சாஸ்திரி சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னை நொறுக்கியது. நான் நொந்து போயிட்டேன் – அஷ்வின் ஓபன்டாக்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 111 ஒருநாள் போட்டிகள், 51 டி20 போட்டிகள் மற்றும் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அறிமுகமான காலத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஷ்வின் இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் கழற்றி விடப்பட்டார். அதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த அஷ்வின் அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வந்தார்.

ashwin 1

- Advertisement -

இருப்பினும் தனது நம்பிக்கையை எந்த இடத்திலும் தவறவிடாத அஷ்வின் சிறப்பாக பந்து வீசி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவது மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடிய அஷ்வின் இனிவரும் தொடர்களிலும் அவர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ச்சியாக பதில் அளித்து வரும் அஷ்வின் தான் கடந்து வந்த பாதையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடன் ஏற்பட்ட ஒரு அனுபவம் குறித்தும் அவர் தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போது அவர் சிட்னி டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

kuldeep 1

அந்த சமயத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி : அயல்நாட்டு மைதானங்களில் இந்தியாவின் முதன்மையான ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தான் என்று தெரிவித்தார். அவர் கூறிய அந்த வார்த்தை என்னை நொறுக்கியது. அன்று நான் மிகவும் மனம் நொந்து போனேன். ஏனெனில் ஒரு வீரராக குல்தீப் யாதவின் சாதனையை பாராட்டுக்குரியது தான். ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட்டுகளை எடுத்தது சிறப்பான ஒன்று. நான் கூட அந்த சாதனையை நிகழ்த்தியது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக திடீரென விலகிய நட்சித்திர வீரர் – வெளியான அறிவிப்பு

இப்படி சிறப்பாக குல்தீப் யாதவ் செயல்பட்டு இருந்தாலும் என்னை அணியில் இருந்து வெளியே தூக்கி எறிந்தது போல் உணர்ந்தேன். அதுமட்டுமின்றி அவர் கூறிய அந்த வார்த்தைகளால் நான் அன்று நெருங்கிவிட்டேன். பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் என் மனைவியுடன் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகே சரியாகி அறையிலிருந்து வெளி வந்து அணி வீரர்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement